நடிகர் விஜய் தேவரகொண்டாவின் லிகர் படப்படிப்பு மீண்டும் தொடங்கிய நிலையில், “BLOOD SWEAT VIOLENCE“ இன்று முதல் துவங்குவதாக இப்படத்தின் இணை தயாரிப்பாளர் புகைப்படத்துடன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு இணையத்தைக் கலக்கி வருகிறது.


 தெலுங்கு திரைப்படங்களின் மூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகர் தான் விஜய் தேவரகொண்டா. பின்னர் 2017 ஆம் ஆண்டு ஷாலினி பாண்டேவுடன் அர்ஜூன் ரெட்டி என்ற திரைப்படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. குறிப்பாக தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம் என ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல ரீச் கொடுத்தது. இதனையடுத்து விஜய் தேவரகொண்டா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.





இந்நிலையில் தான் தற்போது தெலுங்கின் முன்னனி இயக்குநரான பூரி ஜகந்நாத்தின் இயக்கத்தில் லிகர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இப்படத்தில் நடிகை அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கும் நிலையில், ரம்யா கிருஷ்ணன். ரோனிட், விஷூ ரெட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் குத்துச்சண்டை வீரரைப்பற்றி என்பதால் ஆக்சன் மற்றும் காதல் ஆகிய இரண்டையம் மையப்படுத்தி வரவிருப்பதால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர். அவ்வப்போது இப்படத்தின் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் தான், செப்டம்பர் 9 ஆம் தேதி திரைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக தாமதமான நிலையில் மீண்டும் படப்படிப்பு தொடங்கியுள்ளது.


 






இந்நிலையில் இப்படத்தின்  இணைத் தயாரிப்பாளர் சார்மி கவுர், நடிகர் தேவரகொண்டாவின புதிய ஸ்டிலுடன் சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பகிர்ந்துக்கொண்டார். அதில் ”BLOOD SWEAT VIOLENCE“ இன்று முதல் துவங்குகிறது எனவும் அதில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டைக் களத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.





இதனையடுத்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை டிவிட்டரில் பகிர்ந்துக்கொண்டுவருகின்றனர். முன்னதாக சிங்கம் மற்றும் புலிகளுக்கு பின்னால் குத்துச்சண்டை வீரர் போன்று விஜய் தேவரகொண்டா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது குறிப்பித்தக்கது. மேலும் பூரி ஜகந்நாத்தின் அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படத்தினை எடுத்துள்ளதால் இப்படம் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.