மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான லிகர் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக தயாராகிவிட்டது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதனை தொடர்ந்து இன்று முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ளது. இனி நீங்கள் லிகர் திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம். 


 




நெகட்டிவ் விமர்சனங்களே அதிகம் :


பல மாஸ் திரைப்படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வெளியான திரைப்படம் "லிகர்". ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த படத்தின் ரிலீஸ்காக காத்து இருந்தார்கள் ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் ஏமாற்றம் தான் அவர்களுக்கு மிஞ்சியது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து இருந்தாலும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம். 


 







படத்தின் ஹைலைட் மைக் டைசன்:
 
இப்படத்தின் ஹைலைட் காட்சி வில்லன் தான். யார் அந்த வில்லன் ? உலகளவில் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்தது தான். மிக்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் எம்.எம்.ஏவின் சாம்பியன் ஆக வேண்டும் என்ற தனது அம்மாவின் லட்சியத்திற்காக போராடி வெற்றி பெறுகிறார் விஜய் தேவர்கொண்டா. அவரின் ஜோடியா ஒரு பொம்மை போல வந்து போகிறார் அனன்யா பாண்டே. 


வேஸ்ட்டா போன உடல் உழைப்பு :


லிகர் படத்தின் பிரமோஷன் மிகவும் பிரமாண்டமாக இருந்தது. சமூக வலைத்தளங்களில் படத்தின் ரிலீஸ் வரை மிகவும் பரபரப்பாகவே  இருந்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியது. படத்திற்காக விஜய் தேவர்கொண்டா மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். ஆனால் அவரின் உடல் உழைப்பு அனைத்தும் வீணாக போனது. அதற்கு முக்கிய காரணம் கதை தேர்வில் கோட்டை விட்டது தான்.  


சுமார் 125 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியாவில் மட்டும் 20  கோடியும் உலகளவில் 33 கோடியும் வெளியான முதல் நாளில் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. வசூல் ரீதியாகவும் படம் தோல்வியை சந்தித்துள்ளது. 


 






 


வெளியாகி ஒரு மாதம் முடியவுள்ள நிலையில் லிகர் திரைப்படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அதன் படி இன்று முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர் டிஸ்னி நிறுவனம்.