நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குநரான மனோபாலா இன்று சென்னையில் காலமானார்.பெரும்பாலும் தனது நகைச்சுவைகளுக்காக அறியப்படும் மனோபாலா,இயக்குனராக இருபது படங்களை இயக்கியுள்ளார்.அவரது சினிமா வாழ்க்கை தொடங்கியது சினிமாவிற்குள் அவர் எந்த மாதிரியான சவால்களை சந்திக்க  நேர்ந்தது முதலான தகவல்களைப் பார்க்கலாம்


சினிமா ஆர்வம்


சினிமாவின் மேல் மனோபாலாவிற்கு ஆர்வம் தொடங்கியது. அவர் பத்தாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த காராணத்தினால் சினிமா பத்திரிக்கைகளை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் மனோபாலா.பேசும் படம் பத்திரிக்கையில் வெளியான சினிமா தொடர்பான கட்டுரைகளை மிக ஆர்வமாக படித்து வந்தார் அவர். ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் அவர்கள் எழுதிய கட்டுரைகளை விரும்பி படிக்கக் கூடியவராக இருந்தார்.


சென்னைக்குப் பயணம்


பெங்களூரில் பி.யூ,சி படித்துக்கொண்டிருந்த மனோபாலா காலேஜை கட்டடித்து தொடர்ச்சியாக சினிமாவிற்கு போகும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.இதனை கண்டுபிடித்த அவரது வீட்டார் அவரை அடித்ததனால் இரவோடு இரவாக உண்டியலை உடைத்து சென்னைக்கு ஓடிவந்தார் மனோபாலா


சினிமாவில் ஏதோ ஒரு வகையில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தார் மனோபாலா.மனோபாலா இயற்கையாகவே நன்றாக ஓவியங்கள் வரையும் திறனைக் கொண்டிருந்தார்.அவரது ஓவியங்களை பார்த்தவர்கள் பரிந்துரைத்ததால் கலை இயக்குநர் ஆக முடிவு செய்தார்.


பின்பு பாலச்சந்திரன் படங்களில் உதவி கலை இயகுனர்களாக வேலை செய்த மனோபாலா பாலசந்தரின் மேல் ஆதர்சம் கொண்டு இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தார்.


பின்பு பல்வேறு சின்ன சின்ன வேலைகளை சினிமாவில் செய்துவந்த மனோபாலா கமலஹாசனின் பரிந்துரையில் இயக்குநர் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். கஜினி திரைப்படத்தின் கதையைக் கேட்ட மனோபாலா அந்த படத்தை தான் தயாரிக்கத் திட்டமிட்டார்.ஏற்கனவே பிதாமகன் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்ததால் இயக்குநர் முருகதாஸை சூர்யாவிடம் கதை சொல்ல வைத்தார் மனோபாலா. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் அந்த படத்தை தயாரிக்க முடியாமல் போனது.பின்பு கஜினி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார் மனோபாலா.


இன்று இளம் இயக்குனர்களில் முக்கியமான ஒருவராக கருதப்படும் எச். வினோத்தை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் யார் தெரியுமா. 2014 ஆம் ஆண்டு எச்.வினோத் இயக்கி வெளியான  சதுரங்க வேட்டை திரைப்படத்தை தயாரித்தவர் மனோபாலாதான்.


சிறிது காலம் வேஸ்ட் பேப்பர் என்கிற யூ டியூப் சேனலை நடத்தி வந்தார் மனோபாலா.பல்வேறு சினிமா பிரபலங்களுடன் இந்த சேனலில் உரையாடினார். நடிகர் மனோபாலா இன்று காலை சென்னையில் தனது வீட்டில் உயிரிழந்தார்.இளையராஜா,ரஜினி,சத்யராஜ் உள்ளிட்ட அனைத்துத் திரைப் பிரபலங்கள் அவர் மறைவிற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்