Leonardo DiCaprio: 25 வயசு டார்கெட்.. காலம் கடந்ததும் காதலிகளை கட் செய்யும் டைட்டானிக் நாயகன்! தொடரும் சர்ச்சை!

தற்போது 47 வயதாகும் டிகாப்ரியோ 25 வயதைத் தாண்டாத பல பெண்களையும் தொடர்ந்து டேட் செய்து வருகிறாரே தவிர திருமண வாழ்வில் தப்பித்தவறியும் கால் எடுத்து வைத்ததில்லை. 

Continues below advertisement

டைட்டானின் எனும் ஒற்றைப் படம் மூலம் உலகின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமடைந்தவர் ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ.

Continues below advertisement

ஹாலிவுட்டில் சிறு வயது முதல் நடித்து வரும் லியனார்டோ டிகாப்ரியோவின் நடிப்புத் திறமைக்காகவும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களுக்கெனவும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

அதேபோல் இன்னும் சிங்கிளாக திருமணம் செய்து கொள்ளாமல் சுற்றும் டிகாப்ரியோவின் தனிப்பட்ட வாழ்வின் மீது இவரது ரசிகர்களுக்கு அலாதி ஆர்வம் உண்டு. தற்போது 47 வயதாகும் டிகாப்ரியோ தன் 18ஆம் வயதில் தொடங்கி பல பெண்களையும் தொடர்ந்து டேட் செய்து வருகிறாரே தவிர திருமண வாழ்வில் தப்பித்தவறியும் கால் எடுத்து வைத்ததில்லை. 

முன்னதாக டிகாப்ரியோ அமெரிக்க மாடலும் நடிகையுமான கமிலா மோரோன் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் நேற்று தங்கள் பிரிவை உறுதி செய்தனர்.

இந்நிலையில், நெட்டிசன்கள் டிகாப்ரியோ மீது தற்போது வித்தியாசமான புகார் ஒன்றை வைத்துள்ளனர்.

 

அதாவது 25 வயதைத் தாண்டும் எந்த ஒரு நடிகையும் டிகாப்ரியோ இதுவரை டேட் செய்ததில்லை என்றும், தான் டேட் செய்யும் பெண்கள் 25 வயதை எட்டப்போவதை அறிந்து முன்கூட்டியே அவர்களுடன் சண்டைபோட்டு டிகாப்ரியோ கட் செய்து விடுகிறார் என்றும் நெட்டிசன்கள் அனல் பறக்க ட்விட்டரில் விவாதித்து வருகின்றனர்.

 

முன்னதாக டிகாப்ரியோ தான் டேட் செய்த கிஸ்லி பண்ட்சென், பார் ரஃபேலி, ப்ளீக் லைவ்லி, எரின் ஹேதர்டன், கெல்லி ரோர் பெர்க் ஆகிய அனைத்து பிரபலங்களையும் அவர்கள் 25 வயதை எட்டும் முன்னரே ப்ரேக் அப் செய்துள்ளார். இந்தப் பட்டியல் திட்டமிடாத ஒன்றாகத் தெரியவில்லை லியோ தெரிந்தேதான் இப்படி செய்கிறார் என நெட்டிசன்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும், ”டிகாப்ரியோ இன்னும் சில நாள்களில் பள்ளி செல்லும் விடலைப் பெண்களைகூட டேட் செய்யத் தொடங்கி விடுவார்”, ”டைட்டானிக் படம் வந்து 25 ஆண்டுகள் ஆகப்போகிறது, டைட்டானிக் படத்துடன் கூட டிகாப்ரியோ ப்ரேக் அப் செய்யலாம், ஆச்சரியமில்லை” என குறும்பாக நெட்டிசன்கள் இணையத்தில் களமாடி வருகின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola