காதலி கமிலா மோரோனை பிரிந்த நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Continues below advertisement






பிரபல ஹாலிவுட் நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ..இப்படி சொல்வதை விட டைட்டானிக் ஜாக் என்றால் நம் அனைவருக்கும் அவரது முகம் சட்டென்று நினைவுக்கு வரும். இதுவரை 30க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள அவர் சமீபத்தில் தனது காதலியான கமிலா மோரோனை பிரிவதாக அறிவித்தார். நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி பிரிவதாக தகவல் வெளியாகியிருந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 






கடந்த 2017 ஆம் ஆண்டு லியோனார்டோவுக்கு 43 வயது மற்றும் கமிலாவுக்கு 21 வயது ஆக இருக்கும் போது இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கினர். முதலில் வயது வித்தியாசம் குறித்து சில விமர்சனங்களை எதிர்கொண்ட இந்த ஜோடி அதுபற்றியெல்லாம் கவலைக் கொள்ளாமல் இருந்தனர். இருவரும் பல இடங்களுக்கு சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. ஆனால் இருவரின் தரப்பில் இருந்து பிரிவு குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. 






இந்நிலையில் லியோனார்டோவின் டேட்டிங் வரலாற்றை சுட்டிக் காட்டி இணையவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதாவது அவர் 25 வயதைத் தாண்டிய எந்த பெண்ணுடனும் டேட்டிங் வைத்துக் கொண்டதில்லை எனவும், இதுவரை அவர் 8 பேருடன் டேட்டிங் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தான் கமிலா 25 வயதை எட்டியிருந்தார். அப்போதே அவரின் டேட்டிங் வரலாறை குறிப்பிட்டு விரைவில் இருவரும் பிரிவார்கள் என பலரும் கணித்திருந்தனர். சொன்னது போலவே இந்த ஜோடி பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.