நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் நடிகர் விஜய் 2வது முறையாக   ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். இதில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ்  பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்த படமானது டைட்டில் வெளியானபோதே வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே  வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் லியோ படத்தின் முதல் பாடலாக ‘அல்டர் ஈகோ - நான் ரெடி’ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளது. இதுதொடர்பான போஸ்டரில் வாயில் சிகரெட்டுடன் கையில் துப்பாக்கியுடனும் விஜய் பார்ப்பதற்கே மாஸாக உள்ளார். 

Continues below advertisement

முன்னதாக லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. தொடர்ந்து 2 ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிங்கம் ஒன்று முக்கிய கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, டைட்டில் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் முந்தைய படங்களை தொடர்புபடுத்தி கதை அமைத்திருப்பார். அதேபோல் இந்த படத்தில் கைதி, விக்ரம் படங்கள் தொடர்பான காட்சிகள் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.