ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது. ’லியோ ப்ளடி ஸ்வீட்’ (Leo: Bloody Sweet) என்ற திரைப்பட டிரெய்லர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதமாக லியோ ஃபீவர் தொடங்கிவிட்ட நிலையில், பட ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 


லியோ கொண்டாட்டம்


 விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் இம்மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தை LEO MONTH-ஆக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


இந்தப் படத்திலும் நட்சத்திர பட்டாளம் உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அதோடு, கில்லி படத்துக்குப் பிறகு விஜய் - த்ரிஷா லியோ படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் கொண்டாடுவதற்கான முக்கியக் காரணமாகவும் இருக்கிறது. லியோ ஃபீவர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தளபதி 68 படத்தின் தகவல்கள் ரசிகர்களின் கொண்டாடத்தை அதிகப்படுத்தியுள்ளது.


கெளதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, அர்ஜூன், மிஸ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. ட்ரெய்லரில் த்ரிஷா- விஜய் இவருக்கும் மகள் இருப்பது போன்ற காட்சி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 


’நான் ரெடி’ 'Bad-ass' பாடல்கள், ஃபஸ்ட் லுக் போஸ்டர் என பல அப்டேட்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 




எ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்


லோகேஷ் கனகராஜின் ஸ்டைலில் ஒரு குட்டிக் கதையில் இருந்து தொடங்குகிறது இந்த டிரெய்லர். மனைவி த்ரிஷா மற்றும் மகளுடன்  நிம்மதியாக அமைதியான முறையில் வாழ்ந்து வரும் பார்த்திபன் (விஜய்) மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் கும்பலால் துரத்தப்படுகிறார். லியோ தாஸ் என்பவர் போல் இருப்பதால் பார்த்திபனைத் துரத்துகிறது ஒரு கொலைகார கும்பல். அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் கொலைகார கும்பல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனது குடும்ப்பத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தால் கொலைகார கும்பல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்படி ட்ரெய்லர் அமைந்துள்ளது. 


ட்ரெய்லரில் காட்சிகள், இசை உள்ளிட்டவை ரசிகர்களை ஈர்த்துள்ளது. பலரும் சமூக வலைதளத்தில் லியோ ட்ரெய்லரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து விவாதம் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. லியோ திரைப்படத்தின் கதை மற்றும் ஹாலிவுட் படமான எ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ் (A History of Violence) படம் இரண்டுக்கும் ஒற்றுமை உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


David Cronenberg இயக்கிய ’எ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்’ திரைப்படத்தில் வரும் டாம் (கதாநாயகன்) அமைதியாக மனைவி, குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். ‘இந்த நாள் எப்போதும்போல இல்லை’ என்ற ஒரு வாக்கியம் அந்த திரைப்படத்தின் ட்ரெய்லரில் வரும்.. அன்றைக்கு டாம் காஃபி ஷாப்பில் வேலைப் பார்த்து கொண்டிருப்பார். ஒரு கும்பல் வந்து கதாநாயகனிடம் வம்பு இழுப்பார்கள். எதிர்பாரத விதமாக அந்த கும்பல் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார்கள். டாம் அங்குள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக துப்பாக்கியை வாங்கி எதிராளியை சுடுவார். மக்களை காப்பாற்றியதால் ‘டாம்’ ஹீரோவாக பார்க்கப்படுவார். இப்படியாக நகரும் ட்ரெய்லரில் திடீரென ‘டாம்’ குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும். எதிரிகளால் துரத்தப்படுவார்கள். லியோ டிரெய்லரும் அதுவும் ஒத்துப்போவதாக இருக்கும்.




டாம் கதாபாத்திரத்தில் விஜய், காவல் அதிகாரி ஜோய் கதாபாத்திரல் கெளதம் வாசுதேவ், ஹீரோ மனைவியாக த்ரிஷா இப்படி எல்லாம் கதாபாத்திரங்களும் 'எ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ் ’ கதையோடு ஒத்துப்போவதாக அமைந்திருக்கிறது.


ஏற்கெனவே இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் உரிமையை லோகேஷ் கனகராஜ் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் லியோ ஷூட்டிங் தொடங்கியது முதலே எ ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் லியோ என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.


இந்நிலையில் எ ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் காட்சிகளுடன் லியோ ட்ரெய்லர் ஒத்துப்போயுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. எது எப்படியோ, இன்னும் 14 நாள்களில்... லியோ திருவிழாவிற்கு ரசிகர்கள் ரெடி!


லியோ ட்ரெய்லர் -



எ ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் ட்ரெய்லர் -