பூசணிக்காய் என்றவுடன் குழம்பு, கூட்டு என்ற உணவுகளே நினைவுக்கு வரும். சிலருக்கோ பூசணிக்காய் என்றால் திருஷ்டிக்காக பயன்படுத்துவது என்பதாகிவிடுகிறது. நீர்ச்சத்து அதிமுள்ள காயின் விதைகளும் ஏராளமான மருத்த்துவ குணங்களை கொண்டுள்ளன.


பூசணி விதைகளில் மெக்னீசியம், துத்தநாகம், போன்ற பிற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் உனவிலும் பூசணி விதைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதை சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளை பெறலாம்.


பெங்களூருவில் உள்ள மருத்துவமனையின் , தலைமை மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர், அபிலாஷா பூசணி விதையின் ஊட்டச்சத்து பற்றி கூறியதை இக்கட்டுரையில் காணலாம். 


ஊட்டச்சத்து நிறைந்தவை 


 மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக உள்ளது. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு அத்தியாவசிய தாதுக்கள் இருப்பதால் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.


இதய ஆரோக்கியம்


அதிக மெக்னீசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.  இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.


நோய் எதிர்ப்பு திறன் மேம்படும்


பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் நோயெதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.


 பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. 


கல்லீரல் நலம்


இதில் ஆரோக்கியமிக்க கொழுப்பு நிறைந்துள்ளதால் கல்லீரல் செயல்பாட்டிற்கு சிறந்ததாக கூறப்படுகிறது. இதனுடன் ஆளி விதைகளைச் சேர்ந்த்து உண்டால் பலம் இன்னும் அதிகரிக்கும்.


ஆழ்ந்த தூக்கத்திற்கு...


பூசணி விதைகளில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது.  இது அனைவருக்கும் சிறந்த தூக்கம் மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. தூக்கத்தை தூண்டும் செரொட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்க உதவும். 


நார்ச்சத்து நிறைந்தது


அதிக நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.


நல்ல கொழுப்பு


பூசணி விதைகள் ஆரோக்கியமான கொழுப்புகளின் ஆதாரமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அடங்கும். அவை மூளை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


ஆரோக்கியமான மனநிலை


 பூசணிக்காயில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் இருப்பதால், அது செரோடோனினாக மாற்றுகிறது. மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது.


இரத்த சர்க்கரை அளவு


 சில ஆய்வுகள் பூசணி விதைகளில் உள்ள மேம்பட்ட வைட்டமின்கள் இன்சுலின் சுரப்பை ஒழுங்குப்படுத்துகிறது.  இது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது.


மெனோபாஸ்


பூசணி விதைகளில் உள்ள பைட்டோ மெனோபாஸ் காலங்களில் உதவும்.


எலும்பு மற்றும் சருமத்தையும் பாதுகாக்கிறது. மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்த பூசணி விதைகள் ஆரோக்கியமான எலும்பு அடர்த்தியை பராமரிக்க பங்களிக்கின்றன. வைட்டமின் ஈ உட்பட பூசணி விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவுகிறது.


பூசணி விதைகளை தினமும் ஏதாவது ஒரு வழியில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வருத்த பூசணி விதைகளை ஓட்ஸ், தோசை, ஸ்மூத்தி என சேர்த்து உண்ணலாம். வருத்த பூசணி விதைகளை நிலக்கடலை போல சாப்பிடலாம். யோகட் சாப்பிடுபவர்கள் அதோடு சேர்த்து சாப்பிடலாம். சாலட், பேல் பூரி, பானி பூரி உள்ளிட்ட ஸ்நாக்ஸோடு சேர்த்தும் சாப்பிடலம்.