லியோ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான அன்பெனும் பாடல் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையமைத்து விஷ்ணு எடவன் இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதி இருக்கிறார். அனிருத் மற்றும் லோதிகா இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளார்கள்.


லியோ படத்தில் விஜய் நடித்திருக்கும் பார்த்தி கதபாத்திரத்தைச் சுற்றி இருக்கும் அவரது மனைவி மகள் மற்றும் நண்பர்கள் (கெளதம் மேனன் , பிரியா ஆனந்த்) ஆகியவர்களை மையமாக இந்தப் பாடல் கொண்டிருக்கிறது. அன்பு என்பதே இந்த உலகத்தில் மிகப்பெரிய ஆயுதம் என்பதை இந்த பாடலின் வரிகள் கூறுகின்றன. அதே நேரத்தில் கணவன் மனைவியாக இருக்கும் விஜய் - த்ரிஷா தங்களது வாழ்நாளின் இறுதிக்காலம் வரை ஒருவரை ஒருவர் துணையை விரும்புவதை இந்தப் பாடல் உணர்த்துகிறது. அன்பெனும் பாடல் வரிகள் இதோ...


(அனிருத்)


உயிர் பாதி உனக்கே.. 


உனில் பாதி எனக்கே..


அன்பெனும் ஆயுதம் தானே,


ஒரு வீரன் நெஞ்சமே..


 


நரை வந்தும் எனக்கே,


துணை நீயும் அருகே,


அன்பெனும் ஆயுதம் தானே,


ஒரு வீரன் நெஞ்சமே..


 


புயல் காற்றில் பனி சேர்ந்தால்


உயிர் தீயே உனைக் காக்க,


அன்பெனும் ஆயுதம் தானே


என்றென்றும் வீரனே...


 


(லோதிகா)


எனக்கான முகமே, 


தினம் பார்க்க வரமே,


அன்பெனும் ஆயுதம் தானே,


உந்தன் நெஞ்சமே..


சுருக்கங்கள் நெருங்கும்,


நீ வேண்டும் உடனே


அன்பெனும் ஆயுதம் தானே..


உந்தன் நெஞ்சமே..


 


விரலோடு விரல் கோர்த்து,


மாரோடு அணைப்பாயே..


அன்பெனும் ஆயுதம் நீயே


என்றென்றும் வீரனே...


தமிழ் தெலுங்கு , மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் பாடல் வெளியாகி உள்ளது.