லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இரண்டாம் முறையாக இணைந்த லியோ திரைப்படம், 540 கோடிகளைக் கடந்து வசூலைக் குவித்துள்ள நிலையில், இப்படத்தின் வெற்றி விழா  கடந்த நவ.01ஆம் தேதி  கோலாகலமாக நடைபெற்றது. 


ஃபோட்டோஸ் பகிர்ந்த விஜய்


சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மிஸ்கின், கௌதம் மேனன், நடிகர்கள் அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் எனப் பலர் கலந்துகொண்ட நிலையில், இந்த விழா பேசுபொருளானது.


விஜய்யின் குட்டி ஸ்டோரி முதல் அரசியல் ஹிண்ட் வரை அவர் பேசிய அனைத்தும் வைரலாகி இணையத்தை ஆக்கிரமித்தன. தொடர்ந்து இன்று ( நவ.05) இந்த வெற்றிவிழா சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே நடிகர் விஜய் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இதயங்களைக் குவித்து வருகின்றன.


இன்ஸ்டாவில் சாதனை


லியோ சக்சஸ் மீட்டில் லியோ படத்தின் பார்த்திபன் கெட் அப்பில் த்ரிஷா மற்றும் தனக்கு குழந்தைகளாக நடித்த மேத்யூ தாமஸ், இயல் என லியோ பட பாத்திரங்களை ஒத்த தோரணையுடன் இவர்கள் வந்தது அங்கிருந்த ரசிகர்களை ஈர்த்தது. மேலும் சக நடிகர்கள் அர்ஜூன் ,மன்சூர் அலிகான், மிஸ்கின் உள்ளிட்ட பலரும் பேசியதும் பேசுபொருளானது


இந்நிலையில், நடிகர் விஜய் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்கள் 34 லட்சத்துக்கும் மேல் லைக்ஸ்களைக் குவித்து மாஸ் காண்பித்து வருகிறது.


 


 






அரசியல் வருகை


லியோ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தவிர்த்து படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்றிருந்தனர். மேலும் இந்த விழாவில், அப்துல் கலாம் ‘Small aim is crime’ எனக் கூறியதாகவும் , பெரிதினும் பெரிது கேள் என பாரதியார் கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டு விஜய் பேசியது அப்ளாஸை அள்ளியது.


சமூக வலைதளங்களில் நிலவும் கருத்து மோதல்களை கண்டித்த விஜய், நமக்கு நிறைய வேலை இருக்கு, நாம் நம் நேரத்தை இதில் வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.


மேலும் 2026ஆம் ஆண்டு பற்றி பூடகமாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் “கப்பு முக்கியம் பிகிலு” என விஜய் அளித்த பதில் அவரது அரசியல் வருகையை உறுதி செய்யும் வகையில் அமைந்து சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.