Leo Shooting Spot Pic: தீ தளபதியாய் விஜய்.. காஷ்மீரில் பரபரபக்கும் லியோ ஷூட்டிங்..! லோகி தந்த லேட்டஸ்ட் அப்டேட்..!
Leo Shooting Spot Pic: காஷ்மீரில் நடந்து வரும் லியோ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழுவினருடனான புகைப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

Leo Shooting Spot Pic: காஷ்மீரில் நடந்து வரும் லியோ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழுவினருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய், இயக்குநர் மற்றும் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் உள்ளனர்.
Just In




இந்த புகைப்படம் தற்போது விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மாஸ்டர் கூட்டணி
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - தயாரிப்பாளர் லலித் குமார் மீண்டும் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வெளியானது. அன்றைய தினம் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நட்சத்திரப் பட்டாளம்
இதையடுத்து தளபதி 67 படத்தில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் அர்ஜூன் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
அடுத்தடுத்து அப்டேட்டுகள்
இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் படக்குழுவும் காஷ்மீர் பயண வீடியோவை அதிகாரப்பூர்வமாக படக்குழு ஏற்கனவே வெளியிட்டது. மேலும் தளபதி 67 படத்தின் டைட்டில் ’லியோ’ என்றும் படக்குழு அறிவித்தது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முதல் இன்று (பிப்ரவரி 10) வரை அடுத்தடுத்து அப்டேட்டுகளை வழங்கி ”லியோ”படக்குழு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், படப்ப்பிடிப்புக்கு மத்தியில் காஷ்மீர் குளிரில் தீ பற்ற வைத்து அதன் அருகில் நின்று எடுத்த புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அதில், #Kashmir
பக்கா ஸ்கெட்ச்
ஏற்கனவே விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியான நிலையில், லியோ படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அக்டோபர் 24 ஆம் தேதி திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை, மறுநாள் 25 ஆம் தேதி விஜயதசமி என விடுமுறை நாட்கள் வருகிறது. ஆக அக்டோபர் 19 தொடங்கி 24 ஆம் தேதி 6 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் அந்த நாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் வசூலை அள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது. கண்டிப்பாக இந்த படமும் அதிகப்படியான வசூலை பெற்று சாதனைப் படைக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.