LEO Release: புதுச்சேரியில் 'லியோ' Vibe...மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்

பல்வேறு சர்ச்சைகள், பிரச்னைகளுக்கு மத்தியில் இன்று காலை 9 மணி காட்சியுடன் புதுவையில் லியோ படத்தை ரசிகர்கள் வரவேற்றனர்.

Continues below advertisement

LEO Release: டிரெய்லரில் ஆபாச வார்த்தை, இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து, சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி ரத்து என்று பல்வேறு சர்ச்சைகள், பிரச்னைகளுக்கு மத்தியில் இன்று காலை 9 மணி காட்சிக்கு புதுச்சேரியில் விஜய் ரசிகர்கள் லியோ படத்தை பட்டாசு வெடித்து, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன்  உற்சாகமாக வரவேற்றனர்.

Continues below advertisement

லியோ திரைப்படம் புதுச்சேரியில் 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதித்துள்ள நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காலை 10 மணிக்கு லியோ திரைப்படம் முதல் காட்சியாக வெளியிடப்படும் எனவும் தமிழகத்தில் காலை 9 மணிக்கு காட்சிகள் துவங்காததால் புதுச்சேரியில் முன்னதாக வெளியிட விநியோகஸ்தர்கள் அனுமதிக்கவில்லை என தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று திரையரங்கு வாசலில் மேளம் அடித்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள படம் “லியோ. இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி,  அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி என ஏகப்பட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ”ராக் ஸ்டார்” அனிருத் இசையமைத்துள்ளார். 

இதனிடையே லியோ படம் இன்று (அக்டோபர் 19) உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் இரண்டு நாட்கள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. அதேசமயம் லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசிடம் தயாரிப்பு நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் காலை முதல் காட்சி 9 மணிக்கு தமிழ்நாட்டில் திரையிடப்பட்டது. 

அதேசமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் லியோ படம் வெளியாகவுள்ளது. இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. 

Continues below advertisement