Leo Movie Release: லியோ படத்திற்கு அனுமதியின்றி பிளக்ஸ், பேனர்கள் வைக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது..


லியோ படம்:


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக “லியோ” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை மறுநாள் (அக்டோபர் 19) ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி,  அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  ரிலீசுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


சிறப்பு காட்சி:


மேலும் அக்டோபர் 19 படம் வெளியாகும் நிலையில், 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் அன்றைய தினத்துக்கான டிக்கெட்டுகள் கிட்டதட்ட விற்று தீர்ந்து விட்டது.


முதல் நாளிலும் அனைத்து காட்சிகளும் டிக்கெட்டுகள் காலியாகி விட்ட நிலையில், சில தியேட்டர்கள் இன்னும் டிக்கெட் முன்பதிவை தொடங்கவில்லை. அப்படியே டிக்கெட்டுகளை விற்கும் தியேட்டர்களும் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையில்,  தமிழ்நாட்டில் லியோ படத்துக்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது என தெரிவித்தது. 


பிளக்ஸ், பேனர்கள் வைக்கக் கூடாது:


இதனால் விஜய்  ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், லியோ படத்திற்கு அனுமதியின்றி பிளக்ஸ், பேனர்கள் வைக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் லியோ படத்திற்கு ராட்சத விளம்பர பதாகை வைப்பதற்கு தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


இதற்கிடையில், லியோ  திரைப்படத்தை அக்டோபர் 20ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என்று ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லியோ படத்தின்  டைட்டில் தங்களுடையது என சிலர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. D Studio என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் லியோ படத்தின் தெலுங்கு பதிப்பை அக்டோபர் 20ஆம் தேதி வரை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 




மேலும் படிக்க


Leo Special Show: லியோ படத்திற்கு 4 மணி காட்சி கிடையாது: உயர்நீதிமன்றம் கொடுத்த ஷாக் உத்தரவு