தென்னிந்திய சினிமாவில் தனது இனிமையான குரலால் ஏராளமான பாடல்களால் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் சின்மயி. டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகமானவர் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலமே பாடகியாக அறிமுகமானார்.


 



ஒரு முன்னணி படகியாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் ஏராளமான பாடல்களை பாடியதுடன் பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள சின்மயி மிகவும் துணிச்சலாக மீ டூ விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் ஏராளமான சிக்கல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக நடிகர் ராதா ரவியால் டப்பிங் யூனியனில் இருந்து தடை செய்யப்பட்டார். 


96 படத்தில் சின்மயி:


2018ம் ஆண்டுக்கு பிறகு தமிழ் திரைப்படங்களில் எந்த ஒரு பாடலையும் பாட அனுமதிக்கப்படவில்லை. விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' திரைப்படத்தில் திரிஷாக்காக படம் முழுக்க டப்பிங் செய்ததோடு படத்தின் அனைத்து பாடல்களையும் சின்மயிதான் பாடியிருந்தார். பாடல்களை அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. அதற்கு பிறகு பல ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவருக்கு லோகேஷ் கனகராஜ் மற்றும் லலித் குமார் இருவரும் லியோ படத்தின் மூலம் மீண்டும் வாய்ப்பு  கொடுத்துள்ளனர். 



சின்மயி போஸ்ட் : 


லியோ திரைப்படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அவருக்கு டப்பிங் பேசியுள்ளார் சின்மயி தான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும்  கன்னடத்திலும் சின்மயி தான் திரிஷாவுக்கு டப்பிங் பேசியுள்ளார். இதற்காக லோகேஷ் கனகராஜ் மட்டும் லலித் குமாருக்கு தன்னுடைய எக்ஸ் பக்கம் மூலம் நன்றி தெரிவித்து அவர்களின் தைரியத்தையும் பாராட்டியுள்ளார். பாடகி சின்மயி பல ஆண்டுகளுக்கு பிறகு டப்பிங் பேசியுள்ளது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. பலரும் சின்மயின் இந்த போஸ்டுக்கு பாராட்டுகளையும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறார்கள். 






லியோ ட்ரைலர் :


96, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு திரிஷாவுக்காக சின்மயி இப்படத்தில் பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த பதிவுக்கு நடிகை திரிஷாவும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். லியோ படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. திரிஷாவின் சில காட்சிகள் ட்ரைலரில் இடம்பெற்று இருந்தன.






கம்ப்ளீட் ஆக்ஷன்:


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கம்ப்ளீட் ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'லியோ'. தமிழ், தெலுங்கும் கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். 


வெறித்தனமாக ரத்தம் சொட்ட சொட்ட வெளியான 'லியோ' படத்தின் ட்ரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது ட்ரெண்டிங்கில் முதலிடம் பெற்றது.