ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வந்த அக்டோபர் மாதம் வந்துவிட்டது. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும்  வெளியாகும் திரைப்படங்களைப் பார்க்கலாம்.


லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளத் திரைப்படம் லியோ. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது லியோ திரைப்படம்.


பகவந்த் கேசரி


ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் மற்றும் பழம்பெரும் நடிகரான என்.டி.ராமராவின் ஆறாவது மகன் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பகவந்த் கேசரி. அனில் ரவிபுடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ள நிலையில் ஹரிஷ் பெட்டி மற்றும் சாஹு கரபதி இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது பகவந்த் கேசரி.


டைகர் நாகேஷ்வர ராவ்


தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடித்து உருவாகி இருக்கும் திரைப்படம் டைகர் நாகேஷ்வர ராவ். வம்சி கிருஷ்ணா நாயுடு மற்றும் வம்சி கிருஷ்ணா அகெல்லா இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில் ரவி தேஜாவுடன் பாலிவுட் நடிகர் அனுபம் கெர், ரேனு தேசாய், நுபுரு சனோன், காயத்ரி பரத்வாஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இந்த மாதம் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது டைகர் நாகேஷ்வர ராவ்


கனபத்


விகாஷ் பால் இயக்கத்தில் டைகர் ஷ்ராஃப், க்ரிதி சனோன், அமிதாப் பச்சன், உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படம் கனபத். வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்


ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் கியோனார்டோ டிகாப்ரியோ, லிலி கிளாட் ஸ்டோன் ராபர்ட் டி நிரோ உள்ளிட்டவர்கள் நடித்துள்ளத் திரைப்படம்  கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன். வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாக இருக்கிறது.


மிஷன் ரானிகஞ்ச்


தினு சுரேஷ் தேசாய் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், பரினீத்தி சோப்ரா, ரவி கிஷன் , குமுத் மிஷ்ரா, பவன் மல்ஹோத்ரா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளத் திரைப்படம் மிஷன் ரானிகஞ்ச். 1989 ஆம் வருடம் ரானிகஞ்சில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க விபத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


கோஸ்ட்


கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் நடித்துள்ளத் திரைப்படம் கோஸ்ட். எம்.ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஜெயராம், அனுபம் கெர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார். இன்று அக்டோபர் 1 ஆம் தேதி கோஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி திரையில் வெளியாகிறது கோஸ்ட் திரைப்படம்.