ஒவ்வொரு வாரமும்  திரையரங்கத்தில் 4 படங்கள் வெளியாகின்றன என்றால் அதைவிட இருமடங்கு  அதிகமானப் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த வாரம் நவம்பர் 24 ஆம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் , வெப் சீரிஸ் என்ன என்னவென்று பார்க்கலாம்.


லியோ (தமிழ்)


லொகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வேட்டையை முடித்துக் கொண்டது. விஜய் , த்ரிஷா, கெளதம் மேனன், மிஸ்கின் , அர்ஜூன் , சஞ்சய் தத் நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசயமைத்திருக்கிறார். பெரும்பாலான ரசிகர்கள் லியோ படத்தை திரையரங்கத்தில் பார்த்துவிட்டாலும் ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரதியில் சில காட்சிகள் சேக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. திரையரங்கத்தில் மியூட் செய்யப்பட்ட சில காட்சிகள் ஓடிடியில் அப்படி இருக்காது என்று எதிர்பார்க்கலாம் . இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது லியோ.


தி வில்லேஜ் (தமிழ்)


ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய ஹாரர் சீரிஸ் ‘தி வில்லேஜ்’. மில்லிந்த் ராவ் இயக்கியிருக்கும் இந்தத் தொடருக்கு ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் இயக்குநர் தீரஜ் வைதி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் திரைக்கதை எழுதியுள்ளார்கள். ஸ்டுடியோ சக்தி ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தத் தொடரை தயாரித்துள்ளது.  ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன் ஜார்ஜ் மாயன், பி. என் சன்னி, முத்துக்குமார் கே, கலைராணி எஸ்.எஸ், ஜான் கொக்கென், பூஜா, வி ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் இந்த தொடரின் நடித்துள்ளார்கள். தி வில்லேஜ் இன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது.


கருமேகங்கள் கலைகின்றன (தமிழ்)


 தங்கர் பச்சன் இயக்கத்தில் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன்,  அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் படம் கருமேகங்கள் கலைகின்றன. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். VAU Media  சார்பில் துரை வீரசக்தி கருமேகங்கள் கலைகின்றன படத்தை தயாரித்துள்ளார். அமேசான் பிரைமில் இந்தப் படத்தை பார்க்கலாம்.


பார்ட்னர் (தமிழ்)


மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி,பாலக் லால்வாணி, யோகிபாபு, பாண்டியராஜன், ரவி மரியா, ஜான் விஜய்,யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் 'பாட்னர்'. ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூரியபிரகாஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் பார்டர் திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்


தி வாக்ஸின் வார் (இந்தி)


‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகி உள்ளத் திரைப்படம் ’தி வாக்சின் வார்’.  நானா படேகர், பல்லவி ஜோஷி, ரைமா சென், சப்தமா கெளடா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, ஐ ஆம் புத்தா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.


பகவந்த் கேசரி ( தெலுங்கு)


தெலுங்கு நடிகர் பாலையா நடித்துள்ள எமோஷ்னல் கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர்தான் பகவந்த் கேசரி.  இன்று அமேசான் பிரைமில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.


ஓப்பன்ஹைமர் (ஆங்கிலம்)


கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில்  வெளியான ஓப்பன்ஹைமர் திரைப்படத்தை ஐமேக்ஸின் பார்க்க தவறவிட்டவர்கள் இன்று முதல் அமேசான் பிரைமில் இந்தப் படத்தைப் பார்க்கலாம். ஆனால் கட்டணம் செலுத்தி.


டீமன் (தமிழ்)


ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகியத் திரைப்படம் டீமன். ஹாரர் திரைப்பட ரசிகர்கள் இன்று முதல் இந்தப் படத்தை ஆஹா தமிழில் பார்த்து மகிழலாம்.


இவைத் தவிர்த்து புள்ளிமாடா, சத்திய சோதனை, சத்ரபதி,சமோசா & சன்ஸ் ஃபுக்ரே 3 , ச்சவீர், என இந்திய மொழிப் படங்களும் ஆங்கிலம்  மற்றும் கொரிய மொழி என மொத்தம் 22 படங்கள் இணையத் தொடர்கள் இன்று வெளியாகின்றன.