தமிழ் சினிமாவின் மோஸ்ட் ஃபேவரட் டைரக்டர் என கொண்டாடப்படும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'லியோ - ப்ளடி ஸ்வீட்'.  'மாஸ்டர்' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இவர்களின் கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைகிறது.


லியோ:


செவன் ஸ்க்ரீன் நிறுவனத்தின் பேனரின் கீழ் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் ராக் ஸ்டார் அனிருத். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சண்டைப்பயிற்சியாளராக அன்பறிவும், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டரும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் புதிய தகவல் ஒன்று தற்போது  வெளியாகியுள்ளது. 


 



 


கடுமையான குளிரில் முடிந்தது படப்பிடிப்பு :


நடிகர் விஜய் ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கும் இப்படத்தில் பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர், இயக்குனர் மிஷ்கின், அர்ஜுன், மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் என பெரிய திரை பட்டாளம் நடிக்கிறது. ’லியோ’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், 50 நாள்களைக் கடந்து காஷ்மீர் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முழுமையாக முடிவடைந்தது. பனி, குளிர், மழை, இரவு, பகல் பார்க்காமல் மைனஸ் 6 டிகிரி முதல் மைனஸ் 20 டிகிரி வரையிலான கடுங்குளிரில் படக்குழுவினர் முழுவீச்சில் ஷூட்டிங்கில் முழுமையாக ஈடுபட்டு முடித்து விட்டு சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார்.


சென்னைக்கு திரும்பிய லியோ படக்குழு :


அதனை தொடர்ந்து லியோ படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவில் நாளை நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் கடும் குளிரில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியுள்ள படக்குழு அடுத்ததாக சென்னையின் கடுமையான வெயிலில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ஆனால் அதுவே சென்னை வாசிகளுக்கு இந்த அடிக்கிற வெயிலுக்கு குளுகுளு செய்தி சொன்ன படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பை முடித்த பிறகு இறுதி கட்ட படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்ல லியோ படக்குழு திட்டமிட்டு உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
மிகவும் மும்மரமாக படப்பிடிப்பை நடத்தி வரும் 'லியோ - ப்ளடி ஸ்வீட்' படக்குழு விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட உள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘விக்ரம்’ படத்தின் வரிசையில்  ‘லியோ’ திரைப்படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனப்படும் எல்.சி.யூவின் ஒரு அங்கமாக இருக்கும் என முன்னதாககத் தகவல்கள் வந்த நிலையில், இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.