நடிகர்கள் ரஜினிகாந்த்,பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”. பி.வாசு இயக்கிய இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கிட்டதட்ட 700 நாட்களுக்கும் மேல் ஓடி தமிழ் சினிமாவில் மகத்தான சாதனைப் படைத்த இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார். பாகுபலி படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மரகதமணி, சந்திரமுகி-2 படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

Continues below advertisement

Continues below advertisement

படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவில்லை என மக்கள் வருந்தினாலும், வைகை புயல் வடிவேல் கம்பேக் கொடுக்கவிருக்கிறார் என்ற ஆறுதல் சந்திரமுகி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

சந்திரமுகி படப்பிடிப்பு மைசூரில் நடந்து வரும் நிலையில், ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி வீடியோ ஒன்றினை போஸ்ட் செய்துள்ளார். அந்த பதிவின் கேப்ஷனில், “ வடிவேலு நம் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். இவர் நடித்த படத்தின் ஒரு பேமஸான காட்சியை நடித்து காட்டியுள்ளார். இந்த காமெடி காட்சி எந்த படத்தில் வரும் என்று யோசிங்க ”என  குறிப்பிட்டுள்ளார்.

இந்த காட்சியில், நடிகர் விஜயின் சுறா படத்தில் பாட்டு கச்சேரி சீன் ஒன்று இருக்கும். அந்த காட்சியில் வடிவேலு வெண்ணிற ஆடை மூர்த்தியை பார்த்து வேடிக்கையாக சைகை செய்வார். வடிவேலுவை பார்த்து கடுப்பான  வெண்ணிற ஆடை மூர்த்தி மேடையில் இருந்து இறங்கி வந்து , “முதல்ல இ-ங்கிறான் அப்புறம் உ-ங்கிறான் கடசியில நீ-ங்குறான். இப்படியே பாடிட்டு இருந்தனா நாக்கு தல்லி செத்துருவன் -னு சொல்றான் “ என கூறுவார். இப்போது சந்திரமுகி இரண்டாம் பாக படப்பிடிப்பில் எடுத்த இந்த காமெடி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.