கேலிப்பொருளாக நெட்டிசன்களிடம் சிக்கி தவித்தாலும் எதற்கும் அஞ்சாத சிங்கமாக தனது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார் " தி லெஜெண்ட் சரவணன்" அருள். அடுத்த படத்தில் அவரின் நியூ லுக் போட்டோ ஓன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


ஹீரோவாக அறிமுகமான தொழிலதிபர்:


தனது சொந்த செலவில் தானே நடித்து அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கவர்ந்தவர் மிக பெரிய தொழிலதிபரான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள். முதலில் தன்னுடைய ஸ்தாபனத்தின் விளம்பர படங்களில் பல நடிகைகளுடன் ஆட்டம் போட்டு பிறகு தனது சொந்த தயாரிப்பில் இரட்டை இயக்குனர்களான ஜெடி மற்றும் ஜெர்ரி இயக்கிய திரைப்படமான " தி லெஜெண்ட்" திரைப்படத்தில் பல கோடி ரூபாய் செலவில் ஹீரோவாக அறிமுகமானார் சரவணன் அருள். 


 



பேன் இந்தியா படம் :


சில மாதங்களுக்கு முன்னர் " தி லெஜெண்ட்" திரைப்படத்தை மற்ற முன்னணி  நடிகர்களுக்கு இணையாக அவரின் படத்தையும் பேன் இந்தியா படமாக அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட்டார். எதிர்பார்ப்பை விடவும் அதிகமாக மிகவும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியானது "தி லெஜெண்ட்" திரைப்படம். தமிழகத்தில் மட்டுமே சுமார் 650ற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 


 






 


முன்னணி நடிகர்களுக்கு சமமாக ஓடிய " தி லெஜெண்ட்":


'தி லெஜெண்ட்'  திரைப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பு பெற்றாலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக பல நாட்கள் நன்றாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. பல மீம்ஸ், கிண்டல், கேலி என அனைத்தையும் மீறி லெஜெண்ட் சரவணன் நடித்த திரைப்படம் 12 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தில் ஊர்வசி ரவுத்தலே சரவணன் அருள் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சுமன், பிரபு, நாசர், ரோபோ ஷங்கர், விவேக், யோகி பாபு மற்றும் பலர் என ஒரு பெரிய திரை பட்டாளமே நடித்திருந்தது. நடிகர் விவேக் நடித்த கடைசி திரைப்படம் இது என்பதால் 
ரசிகர்கள் அவரின் நகைச்சுவையை மிகவும் ரசித்தார்கள். படத்தின் தொழிநுட்பம் சிறப்பாக அமைந்து இருந்தாலும் திரைக்கதை சற்று வீக்காக இருந்தது ஒரு மைனஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது. 


 






 


அடுத்த டூயட் பாட ரெடியான லெஜெண்ட் சரவணன்:
 
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சரவணன் அருள் தனது அடுத்த ரொமான்டிக் மற்றும் ஆக்ஷன் கலந்த அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். அவரின் அடுத்த படத்திற்கான நியூ லுக் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.