‛எஸ்.டி.ஆர்.,யின் பத்து தல...’ என கூல் சுரேஷ் கூற, பின்னால் நின்று கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள், ‛கூல் சுரேஷிற்கு சொட்டத் தல..’ என கவுன்டர் கொடுக்க, அதை சற்றும் எதிர்பார்க்காத கூல் சுரேஷ், பின்னால் திரும்பி பார்த்த போது, அங்கு அவரை கிண்டலடித்து நின்று கொண்டிருந்தார்கள் மாணவர்கள். அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே, அடுத்து என்ன பேசுவது என தெரியாமல், கொஞ்ச நேரம் திகைத்து போனார் அவர்.
பிறகு, எதுவும் நடக்காததைப் போலவும், தனக்கு பிரச்னை இல்லாததைப் போலவும் மீண்டும் அவரது வசனத்தை தொடர்ந்தார். ‛எஸ்.டி.ஆர்.,யின் பத்து தல... காலங்களில் அவள் வசந்தம் கெத்து தல...’ என அவர் சொல்லி முடிக்க, அவருடனேயே அவரை கிண்டலடித்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர் மாணவர்கள். அதுவரை சிரித்து சமாளித்த கூல் சுரேஷ் முகம், கொஞ்சம் மாறியது. அவர் பேசும் போது பின்னால் கத்திக்கொண்டே இருந்ததால், ‛யேய்... இருப்பா இருப்பா ’ என அவர்களை நோக்கி கை நீட்டினார்.
பின்னர், ‛என்னை பத்தி பின்னாடி ஒரு தம்பி கிண்டல் பண்ணிருந்தாரு. ‛எஸ்டிஆர்.,யின் பத்து தல.. லா காலேஜ்னா கெத்து தல...’ என கூறிவிட்டு, மீண்டும், ‛எஸ்டிஆர்.,யின் பத்து தல.. பின்னாடி குரல் கொடுத்த லா காலேஜ்னா கெத்து தல...’ என அழுத்தமாக கூறினார். மீண்டும் மீண்டும் அதே அவர் கூற, விசில் பறந்தது. அதன் பின் அவர் பேசிய போது, கூச்சல் தொடர்ந்ததால், ‛தம்பி... தம்பி... நீங்கெல்லாம் படத்துக்கு சப்போர்ட் பண்ண வந்திருக்கீங்களா... இல்லை படத்தை கெடுக்க வந்திருக்கீங்களாப்பா... ஏண்டா தம்பி...’ என கோபாம் ஆனார்.
பின்னர் பேச்சை தொடர்ந்த அவர், ‛இல்ல... லா காலேஜ் பசங்கனாலே ஒரு கெத்து தானே... ஆமாவா... இல்லையா... படத்தோடு ஹீரோவும் லா காலேஜ்னு’ நெனக்கிறேன் என அவர் கூற, ‛அவர் அட்வகேட்’ என பிறர் பதிலளிக்க, வழக்கம் போல , ஹீரோ பெயரையும், இயக்குனர் பெயரையும் கூறி, கெத்து தல வசனத்தை போட்டார். அதன் பின் பேச்சை தொடர்ந்தார்.
‛‛காலங்களில் அவர் வசந்தம் படம் பார்க்க வந்தேன். ‛காலங்களில் அவள் வசந்தம்... கலைகளிலே அவள் ஓவியம்... மாதங்களில் இவள் மார்கழி... மலர்களிலேயே இவள் மல்லிகை...’ அப்படி தான் ஹீரோயின் உள்ளார். இதோ அவரது போட்டோ. இந்த போட்டாவை நான் தடவ மாட்டேன். ஏன்னா... ஹீரோ கெளசிக், இந்த படத்தில் ஹீரோயினை தடவு தடவுனு தடவிட்டான்ப்பா.... வெறியோ வெறினு வெறிச்சிட்டான்... பறியோ பறினு பறிச்சிட்டான்... உதையோ உதைனு உதைச்சுட்டான்... கெளசிக்கு... வாழ்க வாழ்க!’’
என அந்த பேட்டியில் கூல் சுரேஷ் பேசியுள்ளார். வழக்கமாக, பலரை கலாய்த்து பேசிவிட்டு செல்லும் கூல் சுரேஷ், இந்த முறை சட்டக்கல்லூரி மாணவர்களால் கலாய்க்கப்பட்டார். அதை அவர் சற்றும் எதிர்பாராத நிலையில், வேறுவழியில்லாமல் அங்கிருந்து புறப்பட்டார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருவதால், இனி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இது எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறது.