ராணா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தா மற்றும் ரமணா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஏ. வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை சுனைனா நடிப்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'லத்தி'. சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் ஒரு வழியாக வெளியானது. 


 



 


ஓடிடியில் வெளியாகும் லத்தி :
 
கலவையான விமர்சனங்களை பெற்ற லத்தி திரைப்படம் திரையரங்குகளில் 20 நாட்கள் மட்டுமே திரையிடப்பட்ட நிலையில் ஓடிடியில் வெளியாக தயாராகிவிட்டது. திரையரங்கில் ஒரு மாத காலம் கூட தாக்கு பிடிக்காத லத்தி ஜனவரி 13ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட உள்ளது. சரி ஓடிடியில் தான் உடனே வெளியாகிறது என்று பார்த்தால் அடுத்து மூன்றே நாளில் பொங்கல் ஸ்பெஷல் திரைப்படமாக சன் டிவியில் ஒளிபரப்பாக போகிறது லத்தி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 


 







பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்கத்தில் வெளியான ஒரு மாத காலத்திற்கு பிறகு தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். ஆனால் லத்தி திரைப்படம் அதற்குள் டிவியில் ஒளிபரப்பாக போவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 



சொதப்பல் திரைக்கதை :


நடிகர் விஷால் இதுவரையில் பல திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றாலும் இப்படத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருந்தார். வழக்கம் போல விஷாலின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை சொல்ல நினைத்ததை சரிவர சொல்ல முடியாமல் போனதால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் போனது. 


 






 


ஏமாற்றத்தில் விஷால் ரசிகர்கள் :


விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் தோல்வியை சந்தித்ததால் லத்தி திரைப்படம் கைகொடுக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த விஷால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 மற்றும் mark ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.