வம்சி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் "வாரிசு" திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. இப்படத்தின் நடிகர் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பாட்டில் இருந்து அவ்வப்போது வீடியோ மாற்றும் புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களை குஷியில் மிதக்க வைத்து. அந்த வகையில் தற்போது மற்றுமொரு புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

Continues below advertisement



 


லவ்லி செல்ஃபீ :


படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபீ தற்போது சமூகவலைத்தளங்களில் தீ போல பரவி வருகிறது. இதுவரையில் நடிகர் விஜய் நடிக்கும் வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் என பகிரப்பட்டு வந்தன. அனால் தற்போது விஜய் மற்றும் ரஷ்மிகா இருவரின் செல்ஃபீ வெளியாகியுள்ளதால் கூடுதல் மகிழ்ச்சியில்  இருக்கிறார்கள் ரசிகர்கள். ரஷ்மிகா மந்தனா நடிகர் விஜயின் மிக பெரிய ரசிகை. அதனால் அவருக்கு ஜோடியாக "வாரிசு" திரைப்படத்தில் நடிப்பதை எண்ணி மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். அதன் வெளிப்பாடாக தான் இந்த செல்ஃபீ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் எந்த அளவிற்கு மகிழ்ச்சியில் உள்ளார் என்பது அவரின் ஸ்மைல் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.   






இப்பவே கோடியில் வியாபாரம் :


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் தமன். படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைவதற்கு முன்னரே கிட்டத்தட்ட ரூ.180 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.






அடுத்த ரவுண்டுக்கு ரெடி :


மேலும் நடிகர் விஜய் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "தளபதி 67" என்ற படத்தில் நடிக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.  


ரஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான "சீதா ராமம்" திரைப்படம் வழக்கமான அதிரடி, திரில்லர் படங்களாக இல்லாமல் ஒரு அமைதியான இனிமையான காதல் கதையாக இருந்ததால் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்று நல்ல வசூலையும் ஈட்டியுள்ளது. இப்படத்தில் மாஸ் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்துள்ள ரஷ்மிகாவுக்கு இனி ஏராளமான வாய்ப்புகள் குவிவது நிச்சயம்.