ஆஃபிஸர் ஆன் ட்யூட்டி - Officer On Duty


ஜீத்து அஸ்ரஃப் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன் நடித்த மலையாள படம் ஆஃபிஸர் ஆன் ட்யூட்டி. விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது இன்று மார்ச் 20 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் , மலையாளர் , இந்தி , தெலுங்கு , கன்னட மொழியில் இப்படத்தை பார்க்கலாம் 


ஃபயர் - Fire


ஜே.எஸ்.கே சதீஷ் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடித்த திரைப்படம் ஃபயர். உண்மை சம்பவத்தை மையப்படுத்திய இப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று ரூ 1.82 கோடி வசூலித்தது. தற்போது மார்ச் 21 ஆம் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது


நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்






தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியானது. பவிஷ், மேத்யு தாமஸ் , அனிகா சுரேந்திரன் , பிரியா பிரகாஷ் வாரியர் , ரம்யா ரங்கநாதன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ரொமாண்டிக் காமெடி படமாக உருவான இப்படம் ஏ செண்டர் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மார்ச் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது


டிராகன்


அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த ஆண்டு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் டிராகன். உலகளவில் இப்படம் ரூ 150 கோடி வசூலித்து தற்போது ஓடிடியில் கலக்க ரெடியாகியுள்ளது. மார்ச் 21 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது டிராகன்