நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பாரத விலாஸ் படம் வெளியாகி இன்றோடு 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
பாரத விலாஸ்:
ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், தேவிகா, ஜெயசித்ரா, சிவகுமார், வி.கே.ராமசாமி, சஞ்சீவ் குமார், ஜெயசுதா, ராஜ சுலோச்சனா, ஸ்ரீதேவி என பலரும் நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இமைசையத்த இப்படத்தின் பாடல்களை மறைந்த கவிஞர் வாலி எழுதியிருந்தார். பாரத விலாஸ் படத்தில் இந்திய தேச ஒற்றுமையை வலியுறுத்தும் “இந்திய நாடு என் வீடு” என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.
இந்த படத்தில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர், பஞ்சாபி என அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் இணைந்து பாடுவது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த பாடலை டி.எம்.சௌந்தரராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், கி.வீரமணி , பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, மலேசியா வாசுதேவன் என பலரும் இணைந்து பாடியிருந்தனர்.
அன்றைய காலகட்டம் மட்டுமல்லாமல் இன்றைக்கும் இந்திய தேசத்தின் ஒற்றுமையை பசைசாற்றும் வகையில் இந்த பாடல் கொண்டாடப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் ஒலிபரப்பப்படுகிறது. இந்திய நாடு பாடலானது அன்றைய மத்திய அரசை வெகுவாக கவர்ந்தது. இதனால் கவிஞர் வாலிக்கு தேசிய விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.
விருதை வேண்டாம் என்ற வாலி :
இதுதொடர்பாக மத்திய அரசு அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் பாடலுக்கு தேசிய விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உங்களைப் பற்றிய விபரங்களை அனுப்புமாறும் கேட்டிருக்கிறது. ஆனால் இந்த கடிதத்தை வாலி குப்பையில் கிழித்து வீசியுள்ளார். அதற்கு காரணம், எனக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்றால், என்னை பற்றி அவர்களே தெரிந்து கொள்ளட்டும். நானே சொல்லி எனக்கு விருது வாங்கினால் அது காசு கொடுத்து வாங்குவதற்கு சமம். அது விருதுக்கான மரியாதையாகவும் இருக்காது.
மேலும் படிக்க: Vetrimaaran: இளையராஜா படத்தால் அருண் மாதேஸ்ரவனுக்கு அழுத்தம் - வெற்றிமாறன் வேதனை!