படை தலைவன் 

மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மகன் சண்முக பாணியன் நடித்துள்ள படம் படை தலைவவன். அன்பு இந்த படத்தை இயக்கியுள்ளார். கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர் , முனிஷ்காந்த் , கருடன் ராம் , ரிஷி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படைத்தலைவன் படத்திற்கு மக்கள் சோசியல் மீடியாவில் என்ன விமர்சனம் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்

படை தலைவன் விமர்சனம் 

அவுட்டேட் ஆன கதை மற்றும் திரைக்கதை பொறுமையை சோதிக்கும் விதமாக இருப்பதாகவும் சண்முக பாண்டியன் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவரது நடிப்பு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார். ஏஐ மூலம் விஜய்காந்த் வரும் காட்சி மட்டுமே படத்தில் ஒரே ஆறுதல் என்று அவர் கூறியுள்ளார். 

ஆக்‌ஷன் மற்றும் எமோஷன்லான காட்சிகள் சண்முக பாண்டியன் நன்றாக நடித்துள்ளார். ஆனால் இதே போல் ஏற்கனவே பல கதைகள் வந்துவிட்டதால் படத்தில் எந்த வித சுவாரஸ்யமும் இருப்பதில்லை. கதையில் யானை ஒரு முக்கிய அங்கமாக வருகிறது. மேலும் யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காட்சிகளில் படகுழுவின் உழைப்பை பாராட்ட வேண்டும். ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட விஜய்காந்தின் தோற்றம் இன்னும் கொஞ்சம் கச்சிதமாக அமைந்திருக்கலாம். இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு எந்த பலமும் சேர்ப்பதில்லை. கஸ்தூரி ராஜா , மூனிஸ்காந்த் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் சண்முகப் பாண்டியனுக்கு ஒரு சிறப்பான ஓப்பனிங் படை தலைவன் படம் கொடுத்திருக்கும்.' என மற்றொரு ரசிகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.