விஜயகாந்த்


தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் இன்று காலை காலமானார். அவரது இறப்பு தமிழ்நாட்டு மக்களின் மனதில் மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு மக்கள் , அரசியல் தலைவர்கள் மற்றும் சக  நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த சமயத்தில் விஜயகாந்த் அவர்களின் குடும்பத்திற்கு அனைவரும் ஆதரவாக நிற்கிறார்கள். இப்படியான நிலையில் விஜயகாந்த தனது இரு மகன்கள் மற்றும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.