ரஜினிகாந்த் , ஶ்ரீதேவி
திரையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக இருந்தவர்கள் ரஜினியும் ஶ்ரீதேவியும். இருவரும் இணைந்து மூன்று முடிச்சு , நான் அடிமை இல்லை அடுத்த வாரிசு , போக்கிரி ராஜா , 16 வயதினிலே , பகவான் தாதா , ஜானி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இதில் மகேந்திரன் இயக்கிய ஜானி படத்தில் ரஜினி மற்றும் ஶ்ரீதேவியின் காதல் காட்சிகள் இன்று வரை புதுமை மாறாமல் இருப்பவை.
குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்த ஶ்ரீதேவி தனது 8 ஆவது வயதில் நடிப்பதை ஓரங்கட்டி தனது படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். பின் தனது 15 வயதில் ரஜினிகாந்த் நடித்த மூன்று முடிச்சு படத்தின் மூலம் நடிப்பிற்கு திரும்பினார். ஶ்ரீதேவியை முதல் முறை பார்த்த அனுபவத்தை ரஜினிகாந்த் ஒருமுறை நினைவு கூறினார். " பாலச்சந்தரை சந்திக்க ஶ்ரீதேவி கவிதாலயா வந்திருந்தார். அப்போது நான் அங்கிருந்தேன். பாலச்சந்தர் அலுவலகத்திற்கு வந்ததும் ஶ்ரீதேவியின் அம்மா அவரை வணக்கம் சொல்ல சொன்னார். ஶ்ரீதேவி எழுந்து நின்று 'வணக்கம் டீச்சர்' என்று சொன்னார். அதை சொல்லிதான் நான் அவரை எப்போதும் வம்புக்கு இழுப்பேன்.
ரஜினிக்காக விரதம் இருந்த ஶ்ரீதேவி
தன்னை திருமணம் செய்துகொள்ள ரஜினி ரஜினி ஶ்ரீதேவி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தடைப்பட்டதால் அதை ஒரு அபசகுனமாக எடுத்துக்கொண்டு ரஜினி எதுவும் பேசாமல் திரும்பிவிட்டார். என்பது நமக்கு தெரிந்த கதைதான். ஶ்ரீதேவி மற்றும் ரஜினிக்கு இடையில் எப்போதும் ஒரு நல்ல நட்பு தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால் ரஜினிகாந்த் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது ரஜினிக்காக ஶ்ரீதேவி ஒரு வாரம் விரதம் இருந்தார் என்கிற தகவல் இங்கு நிறைய பேர் அறிந்திராத ஒன்று.
2011 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் உடல் நிலை சரியில்லாத காரணத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் குணமடைந்து திரும்பி வர வேண்டும் என்பதற்காக வேண்டிக்கொண்டிருந்தார்கள். ரஜினிக்கு உடல் நிலை மோசமாக இருப்பது தெரிந்த ஶ்ரீதேவி ஷீரடி சாய் பாபாவுக்கு ஒரு வார காலம் விரதம் இருந்தாராம். புனேவில் உள்ள சாய் பாபா கோயிலுக்கு நேரில் சென்றும் பிரார்த்தனை செய்துவந்தார் ஶ்ரீதேவி .