நடிகர் ராஜேஷ் மரணம் 

சினிமா , சீரியல் என பன்முகத் தன்மையோடு வலம் வந்தவர் நடிகர் ராஜேஷ். இன்று காலை இவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949- ஆம் ஆண்டு பிறந்தவர் ராஜேஷ். கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவரது உண்மையான பெயர் வில்லியம்ஸ். தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததும்... பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவருக்கு, 1974-ல் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரையும் ராஜேஷ் என மாற்றி கொண்டார்.

400க்கும் மேல் கதாபாத்திரங்கள்

தொடர்ந்து, இயக்குனர் பாலகுரு இயக்கத்தில் வெளியான 'கன்னி பருவத்திலே' படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். பின்னர் தாய் மனம், தை பொங்கல், நான் நானேதான், அந்த 7 நாட்கள், உட்பட பல படங்களில் நடித்தார். இவர் ஹீரோவாக நடித்த படங்கள் மிகவும் குறைவு என்றாலும், 400-கும் மேற்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார் ராஜேஷ். அதே போல் சில படங்களுக்கு டப்பிங் செய்துள்ள ராஜேஷ்... ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நிறைவடைந்த 'கார்த்திகை தீபம்' சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் ஹீரோயினின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். 

கலைஞர் பற்றி நடிகர் ராஜேஷ்

நடிகர் ராஜேஷின் இறப்பைத் தொடர்ந்து அவரது பல நேர்காணல்களை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள். இதில் கலைஞர் கருணாநிதி பற்ற அவர் பேசியுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது இந்த வீடியோவில் ராஜேஷ் " எனக்கு சினிமாவிற்கு வருவதற்கு முன்புவரை திக்கி பேசும் பிரச்சனை இருந்தது. அந்த பிரச்சனையை போக்கியவர் கலைஞர் கருணாநிதி தான். கால்கள் விளையாடுகின்றன. பரிசு வாங்குவதோ கைகள் . கைகள் விளையாடுகின்றன. பதக்கம் வாங்குவதோ கழுத்து. ஒரு மனிதன் 18 - 20 வயதிலே இப்படி சிந்தித்திருக்கிறார். அவருடைய 36 ஆவது வயதில் நான் கலைஞரை சந்தித்தேன். எனக்கு அப்போது 12 வயது. இன்றும் நான் அவரை வியந்து பார்க்கிறேன். 5 வருடம் ஏழு வருடத்திர்கு மேல் ஒருவரால் சினிமாவில் நிற்க முடியாது. திரைப்படத்தில் வசனம் என்று கலைஞர் பெயர் வந்தால் கைதட்டு வாங்கியவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வசனம் , நாவலருடைய பேச்சில் உள்ள உச்சரிப்பு தான் என்னை தமிழ் பேச வைத்தது. ஓடினால் ஓடினால் வாழ்க்கையின் தூரத்திற்கே ஓடினால் என்கிற வசனத்தை நாங்கள் எல்லாரும் மனப்பாடம் செய்திருக்கிறோம். தமிழக வரலாற்றிலே ஸ்வாமி , நமஸ்காரம் என்று சொல்லிக் கொண்டு இருந்த கலாச்சாரத்தை மாற்றி நமஸ்காரம் என்று சொல்ல வைத்து ஆண் பெண் சம உரிமைகளை கொடுத்து சமூதாய சீர்குலைவுகளை தோலுரித்து காட்டியவர் கலைஞர் " என நடிகர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

நடிகர் ராஜேஷின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று  இரங்கல் செல்த்தினார்.