ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஷ்வர்யா ரஜினிகாந்த்
தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஐஷ்வர்யா ரஜினிகாந்த். 3 திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டராக மாறியது. இதனைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்த் நடித்த வை ராஹா வை படத்தை இயக்கினார். இந்தப் படம் கலவயான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தனது மூன்றாவது படமாக லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.
லால் சலாம்
கிரிக்கெட் விளையாட்டை மையாமாக வைத்து ஸ்போர்ட்ஸ் டிராமா படமாக உருவாகி இருக்கிறது லால் சலாம். விஷ்னு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள் . ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
மொய்தீன் பாய்
படத்திற்கு மேலும் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் சிறப்பு கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் விமர்சிக்கப் பட்டது. இநிந்லையில் இன்று லால் சலாம் திரைப்படத்தில் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. ரஜினிகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளார்கள். லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்
லால் சலாம்
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படம் “தலைவர் 170” . ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.