கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'லால் சலாம்'. இதில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும் இது ரஜினி படம் என்றே பேசப்பட்டது. 


தனுஷ் நடித்த '3', கௌதம் கார்த்திக் நடித்த 'வை ராஜா வை' படங்களை இயக்கியதற்கு பிறகு ஒரு நீண்ட இடைவேளைக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனராக என்ட்ரி கொடுத்த திரைப்படம் 'லால் சலாம்' . ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க, திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பெற்றது. ' ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கேரெக்டரில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மேலும் செந்தில், தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா ராஜசேகர், தன்யா பாலகிருஷ்ணன், தங்கதுரை உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
  


 



 


நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார் என சொல்லப்பட்டாலும் இது அவருடைய படமாகவே பார்க்கப்பட்டது. அதனால் படத்தின் துவங்கம் முதலே ஹைப் இருந்து கொண்டே இருந்தது. அப்படி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற தவறியது. படம் பயங்கரமான பிளாப் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் 'லால் சலாம்' படக்குழுவினருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம் " மக்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி. வெற்றிகரமான இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது 'லால் சலாம்' திரைப்படம்." என தெரிவித்துள்ளது. 


 




Sacnilk இணையதளத்தின் அடிப்படையில் 'லால் சலாம்' திரைப்படம் 13 நாட்களின் வசூல் பொறுத்தவரையில் நேற்றைய நிலவரப்படி 16.98 கோடி வசூலிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  


 














 


இப்படம் சில திரைக்கதை சொதப்பல் காரணமாக தோல்வியை சந்தித்தது என பாக்ஸ் ஆபீஸ் தரப்பில் இருந்து சில தகவல்கள் இணையத்தில் கசிந்ததால் தான் படக்குழு இப்படி ஒரு வெற்றி கொண்டாட்டம் என புகைப்படத்தை பகிர்ந்துள்ளது என சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. படம் வெளியாகி 2 வாரங்கள் முடிந்த நிலையில் 20 கோடியை கூட வசூலிக்கவில்லை. அப்படி இருக்கையில் வெற்றிநடை போடுகிறது, சக்சஸ் மீட் என்றெல்லாம் சொல்லி ஒரு போட்டோவை பகிர்ந்துவிட்டால் அது சக்சஸ் மீட்டாகிவிடுமா என நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.