மணிகண்டன் நடித்த லவ்வர் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் படத்தின் மூன்று நாட்களின் வசூல் நிலவரங்களைப் பார்க்கலாம்.


லால் சலாம் 


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படம் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகியது. விஷ்ணு விஷால், விக்ராந்த், மற்றும் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் லால் சலாம் படத்தின் ரிலீஸை கொண்டாடி வருகிறார்கள். லால் சலாம் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வந்துகொண்டிருக்கும் நிலையில், படத்தில் ரஜினியின் நடிப்பு சிறப்பாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். சாதி, மத பேதங்கள் இல்லாமல் ஒற்றுமையை இப்படம் வலியுறுத்தியுள்ளது ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. 


வசூல் நிலவரம்






லால் சலாம் படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ.3.55 கோடி வசூல் செய்தது. முதல் நாளைத் தொடர்ந்து  இரண்டாவதாக நேற்று ரூ.3.25 கோடி வசூல் செய்துள்ளது. இன்று மூன்றாவது நாளாக இப்படம் ரூ.3 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


லவ்வர்


குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி,  ஹரிஷ் குமார்,  கீதா கைலாசம், ஹரிணி , நிகிலா சங்கர்,  அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.


அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியானது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வேலண்டைன்ஸ் வார ஸ்பெஷலாக இப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பை மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கும் லவ்வர் படம் இளம் தலைமுறையினர் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.


வசூல்


சாக்னிக் தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி லவ்வர் படம் முதல் நாளில் ரூ.70 லட்சம் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக  ரூ.1.10 கோடி படம் வசூலித்துள்ளது. இன்று மூன்றாவது நாளான நேற்று லவ்வர் படம் ரூ.90 லட்சம் வசூல் செய்ததாக தெரிவித்துள்ளது. 




மேலும் படிக்க : Siragadikka Aasai: மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை: சிறகடிக்க ஆசையில் இந்த வாரம் நடக்கப்போவது இதுதான்


Behind the song: அடடே! இந்த பாட்டுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா? 12பி பாடலில் இருக்கும் சுவாரஸ்யம்