Ananthika Sanilkumar:ப்ரபோஸ் பண்ண லிமிட் இருக்கு.. தாண்டினால் அடிச்சிருவேன் - ரஜினி பட நடிகை அதிரடி

லால் சலாம் படத்தின் மூலம் அனந்திகா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு தமிழில் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

Continues below advertisement

எனக்கு அதிகமாக கோபம் வந்தால் அடித்து விடுவேன் என லால் சலாம் படத்தின் நடிகை அனந்திகா தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த  பிப்ரவரி 9 ஆம் தேதி  திரையரங்குகளில் “லால் சலாம்” படம் வெளியாகினது. நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர். மேலும் அனந்திகா சனில்குமார், தன்யா பாலகிருஷ்ணா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா என பலரும் நடித்துள்ளனர். 

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இருவரும் முக்கிய கேரக்டரில் கேமியோ ரோலில்  நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் பற்றி பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. சாதி, மத பேதங்கள் இல்லாமல் ஒற்றுமையை இப்படம் வலியுறுத்தியுள்ளது ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. 

இதனிடையே லால் சலாம் படத்தின் மூலம் அனந்திகா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு தமிழில் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், லால் சலாம் பற்றி பல விஷயங்களை தெரிவித்தார். 

அதில், “லால் சலாம் ரிலீசாவதற்கு முந்தைய நாள் ரொம்ப பதற்றமாக இருந்தது. இப்படம் நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. இவ்வளவு பெரிய படத்தில் ஒரு பகுதியாக இருப்பது சந்தோசமாக உள்ளது. படத்தில் நான்  கோபப்படும் காட்சியில் நடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. நிறைய டேக் எடுத்தார்கள். பெண் இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர்கள் எப்படி வேலை வாங்குகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. 

நான் தமிழ் சினிமாவுக்குள் வருவதற்கு முன் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. லால் சலாம் படத்துக்குப் பின் என்னை தம்பி ராமையா உள்ளிட்ட சிலர் போன் பண்ணி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ரஜினிகாந்த சார் என்னிடம் பாடல்கள், கொஞ்சம் காட்சிகள் பார்த்தேன் எல்லாம் நல்லாருக்குமா என சொன்னார்கள்.எனக்கு அதிகமாக கோபம் வந்தால் எதிரே உள்ளவர்களை அடித்து விடுவேன். இதனால் நண்பர்களுக்குள் மிகப்பெரிய சண்டையே நடந்துள்ளது. எனக்கு ப்ரோபோசல்கள் வந்திருக்கு. அப்படி வந்தபோது வேண்டாம் என சொல்வேன். அது ஒரு லிமிட் வரைக்கும் பொறுமையாக இருப்பேன். அதை தாண்டினால் தான் அடிப்பேன்” என தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: Valentine's Day: பள்ளியில் மட்டும் 3 காதல்கள்.. சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நிலையா?

Continues below advertisement