தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான 'லட்சுமி மூவி மேக்கர்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளிதரன் காலமானார். தற்போது வெளியான இந்த செய்தி திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பிரபலமான தயாரிப்பாளர்கள் :
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளான கே. முரளிதரன், ஜி. வேணுகோபால், வி. ஸ்வாமிநாதன் ஆகியோர் 1994ம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள். அரண்மனைக்கிளி திரைப்படம் மூலம் இவர்களின் பணி திரையுலகில் தொடங்கியது. அதனை தொடர்ந்து பிரியமுடன், கோகுலத்தில் சீதை, பகவதி, உன்னை நினைத்து, புதுப்பேட்டை, சகலகலா வல்லவன் என பல திரைப்படங்களை தயாரித்து வந்தனர். கடைசியாக இவர்களின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'சகலகலா வல்லவன்' என்பது குறிப்பிடத்தக்கது. படங்களை தயாரித்ததோடு விநியோகமும் செய்து வந்தார்கள்.
மிக பெரிய இழப்பு :
முன்னணி நடிகர்களான கமல்,விஜய் சூர்யா போன்ற கதாநாயகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் முரளிதரன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று மதியம் 1 . 30 மணியளவில் கும்பகோணத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவரின் இழப்பு இந்த திரைத்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. இவர் தயாரிப்பு சங்கத்தில் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.