Just In





''லோக்கல் சேனல்ல போட்டாங்க.. செம காமெடியா இருக்கும் ' மலையாள டப்பிங்கை கலாய்த்த லக்ஷ்மி மேனன் !
லக்ஷ்மி மேனன் தமிழ் சினிமாவில் நடிப்பது , மலையாள ரசிகர்களுக்கு பெரிதாக தெரியாது என்கிறார்.

லக்ஷ்மி மேனன் :
மலையாள பூமியில் இருந்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தை நடிகைகளுள் லக்ஷ்மி மேனனும் ஒருவர். நடிகர் சசிகுமாருடன் ’சுந்தரபாண்டியன்’ என்னும் படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெளியான சமயத்தில் லக்ஷ்மி மேனன் பள்ளி செல்லும் சிறுமியாக இருந்தார். ஆனாலும் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமாக சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தார். அதன் பிறகு இவர் பிரபல இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி’ திரைப்படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்திருந்தார். அந்த படமும் மிகப்பெரும் வெற்றிப் பெற்றது.அதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு முதல் இவர் நடித்த பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா படங்களும் வெற்றிப்பெற்றன. நடிகர் அஜித்தின் தங்கையாக இவர் நடித்த வேதாளம் படமும் மாபெரும் ஹிட் அடித்தது. அந்த படத்திற்கு பிறகு முத்தையா இயக்கத்தில் ’புலிக்குத்தி பாண்டி’ , ஏஜிபி ஸ்கிசோஃபெர்னியா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மலையாள டப்பிங்கை கலாய்த்த லக்ஷ்மி மேனன் :
லக்ஷ்மி மேனன் தமிழ் சினிமாவில் நடிப்பது , மலையாள ரசிகர்களுக்கு பெரிதாக தெரியாது என்கிறார். மேலும் தான் நடிப்பதையும் அங்கு யாரிடமும் சொல்லிக்கொள்ள மாட்டாராம். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி படம் இப்போதுதான் அங்கு பலருக்கு பரீட்சியமாகிறது என்னும் லக்ஷ்மி மேனன் , அதுவும் லோக்கல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால்தான் என்கிறார். இதில் கும்கி , பாண்டியநாடு உள்ளிட்ட திரைப்படங்களை மலையாளத்தில் டப் செய்து வெளியிட்டிருந்தார்களாம் . பார்ப்பதற்கு செம காமெடியாக இருக்கும் என மலையாள டப்பிங்கை கலாய்த்து பேசியிருக்கிறார் லக்ஷ்மி .
இன்ஸ்டாகிராம் மேனன் :
இன்ஸ்டாகிராமில் லக்ஷ்மி மேனன் செம ஆக்டிவ் . அவ்வபோது தனது ரசிகர்களுடன் உரையாடுவது, உடற்பயிற்சி புகைப்படங்களை பதிவேற்றி மோட்டிவேட் செய்வது உள்ளிட்ட சில பிடித்த ஆக்டிவிட்டீஸையும் செய்து வருகிறார்.இவர் தற்போது பிரபுதேவாவுடன் ’யங் மங் சங்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.