Laal Singh Chaddha: டென்னிஸ் வீராங்கனையை காதலித்தேன்; அது ஒரு காலம் - அமீர்கான் பகிர்ந்த காதல் கதை!
அமீர் கான், கரீனா கபூர், நாகசைதன்யா நடித்துள்ள இந்தப் படத்தின் சிங்கிள்ஸ் பாடல் தற்போது வெளியாகியுள்ளது

அமீர்கான் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சிங் சத்தா. அமீர் கான், கரீனா கபூர், நாக சைதன்யா நடித்துள்ள இந்தப் படத்தின் சிங்கிள்ஸ் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காஹானி எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை சோனு நிகம் பாடியுள்ளார்.
Just In




1994 ஆம் ஆண்டு டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’. இந்தப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அமிர்கான், கரீனா கபூர் நடித்துள்ள இந்தப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன், அமீர்கானும் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இது ஒருபக்கம் இருக்க அண்மையில்தான் படத்தில் நடித்த அமீர்கான் தானே பாடிய ஒரு சிங்கில்ஸை வெளியிட்டார். அவர் சமீபத்தில் ரொமான்ஸ் மெலடி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘Phir Na Aisi Raat Ayegi’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலை நடிகர் ஆமிர் கான் தனது சமூக வலைத்தளங்களின் லைவ் பகுதி மூலமாக வெளியிட்டார். திரைப்படங்களில் காதல் வயப்பட்ட ஆமிர் கானைக் கொண்டாடிய ரசிகர்களுக்கு இந்தப் பாடல் வெளியீட்டின் போது அதிர்ச்சி தரும் விதமாக தனது முதல் காதல் குறித்தும், முதல் காதல் முறிவு குறித்தும் பேசியுள்ளார் ஆமிர் கான்.
‘Phir Na Aisi Raat Ayegi’ பாடல் வெளியீட்டை இந்தியாவின் இளம் படைப்பாளிகளுடன் உரையாடி வெளியிட்ட அமிர் கான் தனது முதல் காதல் முறிவு பற்றிய கதையைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், `அது நான் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த காலம். அப்போது அந்தப் பெண்ணும் நான் இருந்த அதே கிளப்பில் விளையாடி வந்தார். ஒருநாள் அவர் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய செய்தி எனக்கு தெரிய வந்தது. நான் மிகவும் மனமுடைந்து போனேன். இதில் என்ன சிறப்பு என்றால், நான் அவரைக் காதலித்தேன் என்பதே அவருக்குத் தெரியாது. அந்தக் காதல் நிறைவேறியிருந்தால் நான் நல்ல டென்னிஸ் விளையாட்டு வீரனாகி இருப்பேன்’ எனக் கூறியுள்ளார்.