நடிப்பில் இருந்து சில மாதங்கள் விலகி இருக்கு முடிவு செய்துள்ள சமந்தா, தனது தினசரி வாழ்க்கையை மகிழ்ச்சியாக செலவிடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தனது நெருங்கிய நண்பர்களான ராகுல் ரவிந்திரா - பாடகி சின்மயி தம்பதியினரின் இரட்டைக் குழந்தைகளுடன் குழந்தையாய் மாறி தான் விளையாடும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.


எங்கே நிம்மதி…. அங்கே எனக்கொரு இடம் வேண்டும்


தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வந்த சமந்தா, தனது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள ஆறு மாத காலம் நடிப்பில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளார். இந்த இடைவேளையில் தன் மனதுக்கு நிம்மதி தரும் இடங்களுக்கு சென்று வருகிறார். ஆன்மீகத் தலங்கள், யோகா மையங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று தனது அனுபவங்களையும் பகிந்து வருகிறார்.


சின்மயி சமந்தா நட்பு


இந்தப் பயணத்தில் அவ்வப்போது தனது நெருங்கிய நண்பர்களுடன் நேரம் செலவிட்டு வரும் தமன்னா தனது நெருங்கிய நண்பரான ராகுல் ரவீந்திரா மற்றும் சின்மயியுடன் தனது ஞாயிறு தினத்தை செலவிட்டுள்ளார். சமந்தாவின் முதல் படமான ‘மாஸ்கோவின் காவேரி’ படத்தில் ராகுல் இணைந்து நடித்தார். அப்போதிருந்து அவருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார் சமந்தா. அதே நேரத்தில் சமந்தாவிற்கு பல படங்களில் பின்னணி குரல் கொடுத்த சின்மயியும் அவருக்கு உற்ற தோழியாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.


குழந்தைகளுடன் குழந்தையாய்






சமீபத்தின் பாடகி சின்மயி மற்றும் ராகுல் தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஷர்வாஸ் மற்றும் த்ரிபதா என அவர்களுக்கு பெயர் வைத்தனர்.  இந்நிலையில், நேற்று தனது இன்ஸ்டாகிராமில் இந்த இரண்டு இரட்டைக் குழந்தைகளுடன் சமந்தா ஆடிப்பாடி விளையாடும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். பின்னணியில் ஆஸ்கர் வென்ற ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஓடிக்கொண்டிருக்க அதற்கு குழந்தைகளுடன் குழந்தையாய் சமந்தா  நடனமாடும் இந்த வீடியோ பார்வையாளர்களை நெகிழச் செய்து லைக்ஸ் அள்ளி வருகிறது.


சமந்தா நடிப்பில் அடுத்து


சமந்தா விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கு குஷி திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் வருண் தவான் , பிரியங்கா சோப்ரா சமந்தா நடித்திருக்கு சீட்டடெல் இணைய தொடரும் விரைவில் வெளியாக இருக்கிறது. இவை வெளியாகும் தருணத்தில் சமந்தா மீண்டும் நடிக்கத் தயாராகி விடுவார் என்று எதிர்ப்பார்க்கலாம்.