Kusboo Schoking tweet: யங் லுக்கில் லண்டனில் குஷ்பூ... அங்க வீடு வாங்கிட்டாங்களாமே... என்ன தான் காரணம்?  


தமிழ் சினிமாவின் அடையாளமாக ஒரு காலத்தில் கோடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. ஹீரோக்களுக்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை குஷ்பூவாக மட்டுமே இருக்க முடியும். 80'ஸ் 90'ஸ்களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் கை கோர்த்து நடித்தவர். இன்றும் பல படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். 



ஆல் ரவுண்டு அம்மா கண்ணு:


வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார் நடிகர் குஷ்பூ. சினிமா ஒருபுறமும் அரசியல் மறுபுறமும் சரிசமமாக சமாளித்து வருகிறார். என்னதான் பிஸியாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் கழிப்பதை தவறவிடுவதே இல்லை என்பதை பல முறை அவரே நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். 


என்றும் இளமை :


வயது கூட கூட அனைவரும் தளர்ந்து சோர்ந்து போவார்கள் ஆனால் நம்ம குஷ்பூவோ வயது அதிகரிக்க அவரது இளமையும் அதிகரித்து கொண்டே போகிறது. தனது உடல் எடையை வெகுவாக குறைத்து மிகவும் மெலிந்து ஸ்லிம்மாக யங் லுக்கில் உலவருகிறார். அதற்கு சரியான உணவு முறையும், உடற்பயிற்சியும் தான் காரணம் என பல முறை தெளிவு படுத்தியுள்ளார் குஷ்பூ. பிஸியான இந்த வுமன் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ். அவ்வப்போது அவரின் புகைப்பங்களை பகிர்வது வழக்கம். 






லண்டன் பயணம் :


சில காலமாக குஷ்பூ உலகத்தை சுற்றி வருவதில் ஆர்வமாக இருந்து வருகிறார். குறிப்பாக லண்டன் பயண புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் லண்டன் மாகாணத்தில் மாடர்ன் உடைகளில் இருக்கும் புகைப்படங்களாக குவிந்துள்ளன. 







லண்டனில் புதிய வீடு :


தற்போது குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டில் குஷ்பூ ஒரு கப் டீ போட்டோவை பகிர்ந்து அதற்கு " லண்டனில் எனது புதிய வீட்டில் என்னுடைய முதல் கப் அப் டீ" என்று தலைப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். என்ன குஷ்பூ லண்டனில் செட்டில் ஆகி விட்டாரா என்று. இந்த போஸ்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 


குஷ்பூவின் இந்த போஸ்டிற்கு என்ன அர்த்தம் என்று விளங்காமல் அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்களை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.