‘வாரிசு’ திரைப்படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியிருக்கிறார். 


விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்  ‘வாரிசு’. தமிழில் 'வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரிலும் இந்தத்திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் வெளிவர இருக்கும் இந்த திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் பொங்கல் ரிலீஸ் என தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 






 


இந்த திரைப்படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் நடிகை குஷ்புவும் நடித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை குஷ்பு வாரிசு திரைப்படத்தில் நடிக்கவில்லை என்ற புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. முன்னதாக, படப்பிடிப்பின் போது படக்குழுவினர்களுடன் குஷ்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானதால் நடிகர் குஷ்பு இத்திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று நடிகை தற்போது குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.






நடிகை குஷ்பு விளக்கம்:


நடிகர் குஷ்பு இன்று கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பின் போது, வாரிசு படம் குறித்த கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. அப்போது "வாரிசு குறித்து என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்… எனக்கும் வாரிசு திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று கூறினார் குஷ்பு. அதன்பின் செய்தியாளர்கள் நீங்கள் படக்குழுவினருடன் இருக்கும் போட்டோ வெளியானதே என்று கேட்டன்ர்‌. அதற்கு பதிலளித்த குஷ்பு,  "நான் அப்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன் பக்கத்து செட்டில் வாரிசு சூட்டிங் நடந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டை போய் பார்க்க கூடாதா..? அப்போது எடுத்த புகைப்படம் தான் அது" என்று கூறியுள்ளார். இதன் மூலம் வாரிசு திரைப்படத்தில் நடிகை குஷ்பு நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.