தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை மற்றும் அரசியல்வாதியான குஷ்பூ குடும்பத்தில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை குஷ்பூ தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 


 



 


குஷ்பூ அண்ணன் காலமானார் :


நடிகை குஷ்பூ இரு தினங்களுக்கு முன்னர் தனது மூத்த சகோதரர் மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில்  உயிருக்கு போராடி வருகிறார். அவரின் உடல்நிலை குணமடைய பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என ட்விட்டர் மூலம் பதிவிட்டு இருந்தார். அதை தொடர்ந்து இன்று நடிகை குஷ்பூவின் அண்ணன் அபுபக்கர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்த துக்கமான தகவலை குஷ்பூ ட்விட்டர் மூலம் மிகுந்த மன வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.  


 






 


குஷ்பூ பதிவிட்ட உருக்கமான பதிவு :


குஷ்பூ வெளியிட்ட பதிவில் என்றுமே அன்புக்குரியவர்களுடன் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புவீர்கள் ஆனால் அவர்களிடம் இருந்து விடைபெற வேண்டிய நேரம் வரும். எனது சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. இருப்பினும் அவரது அன்பும் வழிகாட்டுதலும் என்றும் எங்களுடன் இருக்கும். அவருக்காக பிராத்தனை செய்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். வாழ்க்கை பயணம் கடவுளால் நிச்சயிக்கப்பட்டது" என குறிப்பிட்டு இருந்தார் நடிகை குஷ்பூ.  


 






80 களில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த நடிகை குஷ்பூ ரசிகர்களின்  கனவு கன்னியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர். சினிமாவின் மூலம் நடிகையாக பிரபலமான குஷ்பூ பாஜாகவில் சேர்ந்து அரசியலிலும் கலக்கி வருகிறார். சமீபகாலமாக உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் லுக்கில் கலக்கி வந்தார். சோசியல் மீடியாவில் அவர் வெளியிடும் போஸ்ட்கள் மிகவும் வைரலாகின சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும்