Cinema Round up: அவதார் 2 வசூல்.. பிக்பாஸில் வெளியேறபோகும் ஏ.டி.கே. வரை..! இது சினிமா ரவுண்ட்-அப்..

நேற்று வெளியாகி வசூலை குவித்து வரும் ஹாலிவுட்டின் அவதார் முதல் உள்ளூர் பிக்பாஸ் வரை.. டாப் 5 சினிமா செய்திகளை உள்ளே!

Continues below advertisement

வசூலை குவித்து வரும் அவதார் 2

Continues below advertisement

இந்தியாவில் அவதார்  படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியான நிலையில், முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 



அவதார் 2 பாகத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவதார்-2 படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.40.50 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்குப் பிறகு இந்தியாவில் முதல் நாளில் அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அவெஞ்சர்ஸ் படம் முதல் நாளில் ரூ.53.10 கோடியை வசூலித்தது. 

வாரிசுக்கு முதல் உரிமை கொடுத்த ரெட் ஜெயண்ட்

தமிழகத்தில் 4 இடங்களில் உள்ள தியேட்டர்களில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வாரிசு படத்தை சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, ஆற்காடு மாவட்டங்களின் தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதேபோல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பிற இடங்களில் படங்களின் விநியோகஸ்தர்களையும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாரிசு படத்துக்காக களமிறங்கியதால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முத்துவை வீழ்த்திய ஆர் ஆர் ஆர்

தமிழ் திரைப்படமான முத்து ஜப்பானில் வெளியாகி முதல் இடத்தை தக்கவைத்திருந்த நிலையில், அந்த சாதனையை ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முறியடித்துள்ளது. 

இந்திய அளவில் பெரும் சாதனையை படைத்த ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பானில் கடந்த அக்டோபர் 21ம் தேதி திரையிடப்பட்டது. ஜப்பானில் உள்ள 44 நகரங்களில் 209 ஸ்க்ரீன்கள் மற்றும் 31 ஐமேக்ஸ் திரைகளில் இப்படம்  திரையிடப்பட்டு கிட்டத்தட்ட JPY400 மில்லியனை தாண்டி வசூல் செய்துள்ளது.

அந்த வகையில் இத்தனை ஆண்டுகளாக சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த முத்து திரைப்படத்தை 53 நாட்களில், பாக்ஸ் ஆபிஸில் 24.10 கோடி வசூல் செய்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

குட்டி அட்லீ வரப்போகிறார்!

கடந்த மாதம் அட்லீ ப்ரியா தம்பதி, தங்களது எட்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். நேற்றைய தினம், தாங்கள் இருவரும் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் பதிவிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், ''எங்களது குடும்பம் வளர்ச்சி அடைகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆம் ! நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம். இந்த அழகான பயணம் முழுக்க  உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு வேண்டும். அன்புடன் அட்லீ, பிரியா மற்றும் பெக்கி'', என தங்களது செல்ல நாய்க்குட்டியுடன் அட்லீ பிரியா தம்பதி இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் ப்ரியா அட்லீ கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களும் அதில் இடம் பெற்று இருக்கிறது. 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் ஏடிகே

இந்த வாரத்தில், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா  ரச்சித்தா மற்றும் விக்ரமன் ஆகியோர் எவிக்‌ஷன் நாமினீஸ்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

பெரிதாக கேமை விளையாடமல், மற்ற போட்டியாளர்களிடம் சண்டையிடுவதையும் புறம் பேசுவதையும் வேலையாக வைத்திருந்த ஏடிகே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதை பார்த்த ஏடிகே ரசிகர்கள் சிலர், ஜனனிதான் நியாயமாக வெளியேறி இருக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

Continues below advertisement