அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் என்ற படம் தற்போது ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 2 வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ஆஹா தமிழின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியானது.
படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இப்படத்தை பற்றி கருத்து கோரிய பார்வையாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.பட இயக்குநர் அவரது முகநூல் பக்கதில் குருதி ஆட்டம் குறித்து சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அவர் மக்களின் அனைத்து கருத்தைகளை படித்ததாகவும், இப்படத்தில் ஏதாவது குறையிருந்தால் அடுத்த முறை தவறுகளை திருத்தி, மேலும் கடின உழைப்பை முதலீடு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். சினிமா ரசிகர்கள் இயக்குநரின் பணிவையும், உழைப்பையும் பாராட்டியுள்ளனர்.
டைரக்டர் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கிய குறுதி ஆட்டம் படம் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மண்ட் தயாரித்தது. இப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜ இசையமைத்துள்ளார். குருதி ஆட்டம் படம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி 500க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில்
வெளியானது.
இப்படத்தில் அதர்வா, சக்தி என்ற கதாப்பாத்திரத்திலும் பிரியா பவானி சங்கர் வெண்ணிலா என்ற கதாப்பாத்திரத்திலும்ம் நடித்துள்ளார்கள். இதுபோக துணை நடிகர்களாக ராதிகா சரத்குமார், ராத ரவி, பிரகாஷ் ராகவன் ஆகியோர்
நடித்துள்ளனர். இப்படமானது காதல் மட்டும் நட்பின் முக்கியதுவத்தை உணர்த்துகிறது என்பது குறிப்பிடதக்கது