மணிகண்டன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் வரிசையில் மணிகண்டனும் ஒருவர். விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான்  படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மணிகண்டன். ஆனால் அவரை ஓரளவிற்கேனும் அடையாளப் படுத்தியப் படம் என்றால் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்துபோகும் படம் தான். குடும்ப சூழல் காரணமாக அடியாளாக சேரும் இளைஞனாக இப்படத்தில்  நடித்திருப்பார் மணிகண்டன். இதனை தொடர்ந்து விக்ரம் வேதா எட்டுத் தோட்டாக்கள் ஆகிய படங்களில் நடித்தார். காலா படத்தில் ரஜினியின் மகனாக லெலின் கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு அனைவரது கவணத்தையும் ஈர்த்தது. மணிகண்டம் முக்கிய கதாபாத்திரமாக அறிமுகமானப் படம் சில்லுக் கருப்பட்டி. இந்தப் படத்தில் கதைச்சூழலுடன் பொருந்திய இவரது இயல்பான நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது. மணிகண்டனின் திறமை வெளிபட்டும் அவருக்கு ஒரு பெரிய ப்ரேக்த்ரூ கொடுக்கும் படம் தேவைப்பட்டது. அந்த குறையை தீர்க்கும் வகையில் அவருக்கு ஜெய்பீம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் மணிகண்டனின் நடிப்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக அவரை முன் நிறுத்தியது. குட் நடை , லவ்வர் , தற்போது குடும்பஸ்த்தன் என மக்கள் கொண்டாடும் நடிகராக வலம் வருகிறார் மணிகண்டன்.

மிமிக்ரி கலைஞராக தொடங்கிய பயணம்

ஒரு நடிகராக மணிகண்டன் மக்களால் அறியப்படுபவதற்கு முன் சினிமாவில் பல்வேறு படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.  கிட்டதட்ட தமிழ் சினிமாவின் அத்தனை நடிகர்களைபோல் அப்படியே பேசக் கூடியவர் அவர். பேசுவது மட்டுமில்லை மிமிக்ரி செய்யும்போது அந்த நடிகரின் உடல்மொழியை அப்படியே செய்துகாட்டும் திறமைகொண்டவர். எல்லா நிகழ்ச்சிகளிலும் மணிகண்டனிடம் மிமிக்ரி செய்துகாட்டச் சொல்லி கேட்பது தற்போது வழக்கமாகிவிட்டது. மணிகண்டனும் ஜாலியாக மிமிக்ரி செய்துகாட்டி வருகிறார். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமாரின் குரலில் பேசி மணிகண்டன் அசத்திய வீடியோ ரசிகர்களிடையே பிரபலமானது. மிக சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இதே கலக்கப் போவது நிகழ்ச்சியில் கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகளுக்குமுன் 2008 ஆம் ஆண்டு இதே நிகழ்ச்சியில் மிமிக்ரியில் செய்து அனைவரையும் அசத்தியிருக்கிறார் கூடுதலாக அந்த சீசனில் ரன்னர் அப்பாக இருந்துள்ளார். அவர் போட்டியாளராக கலந்துகொண்ட பழைய வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

.