தனுஷ்


குபேரா , ராயன் , இளையராஜாவின் பையோபிக் என அடுத்தடுத்தப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் தனுஷ் . தற்போது தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.


குபேரா


கடந்த சில மாதங்கள் முன்பாக குபேரா படத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முதற்கட்டமாக ஹைதராபாத் மற்றும் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது மும்பையில் இப்படத்தின் அடுத்தக் கட்ட படபிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் நாகர்ஜூனாவின் கெட் அப் போஸ்டர் ஒன்றும் சமீபத்தில் வெளியானது.


தனுஷ் எடுத்த ரிஸ்க்






தற்போது குபேரா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள பெரிய குப்பை கிடங்கு ஒன்றில் நடந்து வருகிறது. இதில் நடிகர் தனுஷ் கிட்டதட்ட பத்து மணி நேரம் மாஸ்க் உட்பட எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் அந்த கதாபாத்திரத்திற்காக தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடித்துள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக அசுரன் படத்திற்கான ஸ்டண்ட் காட்சிகளை எல்லாம் தனுஷ் அவரே செய்திருந்தது ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற நிலையில் தற்போது இப்படத்திற்காகவும் அவருக்கு பாராட்டுக்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குபேரா படத்திற்கு பின் தனுஷ் தெலுங்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.


ராயன்


தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் படம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். செல்வராகவன் , எஸ்.ஜே சூர்யா , பிரகாஷ் ராஜ் , துஷாரா விஜயன் , அபர்னா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் , சரவணன் , சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது . ராயன் படத்தின் முதல் பாடல் மே 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாகவும் பிரபுதேவா இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப் படுகின்றன.




மேலும் படிக்க : Kurangu Pedal Movie Review: நாஸ்டால்ஜியாவை தூண்டும் சிவகார்த்திகேயன் படம்... குரங்கு பெடல் திரை விமர்சனம்!