இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இந்த படத்தில் இயக்குநர் பாரதிராஜா, யோகி பாபு, அதிதி பாலன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல பிரலபங்களும் நடிக்கின்றன. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 


கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தை வாவ் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த 6ம் தேதி வெளியானது. 






இந்தநிலையில், ஜிவி பிரகாச் இசையில் கவிபேரரசு வைரமுத்து எழுதிய பாடல் வரிகளை சின்னகுயில் சித்ரா பாடியுள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,


 “கருமேகங்கள் கலைகின்றன
பாட்டுப் பதிவு


தங்கர்பச்சான் இயக்கத்தில்
ஜி.வி.பிரகாஷ் இசையில்


சித்ரா பாடிய முதல்பாட்டு
பூஜைக்கேத்த பூவிது;
நான் எழுதியது


39ஆண்டுகளுக்குப் பிறகும்
அதே குரல்; அதே கனிவு;
அதே பணிவு


நீங்களும் காணுங்கள்” என பதிவிட்டுள்ளார். இதனுடன் ஒரு வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், கவிஞர் வைரமுத்து, சித்ரா மற்றும் இயக்குநர் தங்கர் பச்சான் உரையாடும் பதிவும் இடம்பெற்றுள்ளது. 


தங்கர் பச்சான்: 


இயக்குநர் தங்கர் பச்சான் தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால் மக்களை கவர்ந்த இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி, சொல்ல மறந்த கதை, தென்றல், அழகி, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, களவாடிய பொழுதுகள் என அவரின் பல படைப்புகள் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. சில படங்களில் நடிகராகவும் தன்னை வெளிப்படுத்திய தங்கர் பச்சான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.