Kottukkaali Trailer: ரிலீசுக்கு முன்பே சர்வதேச அளவில் அங்கீகாரம்... சூரியின் 'கொட்டுக்காளி' டிரைலர் குறித்த அப்டேட்...

Kottukkaali Trailer: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி நடித்துள்ள 'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி மெல்ல மெல்ல குணச்சித்திர நடிகராக பரிணாமம் எடுத்து இன்று அடுத்தடுத்து வெற்றி படங்களின் ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சூரி. அவரின் நடிப்பில் வெளியான விடுதலை, கருடன் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதுடன் சூரியின் நடிப்பும் பாராட்டுகளை குவித்தது. அடுத்ததாக சூரியின் நடிப்பில் விடுதலை பார்ட் 2 படம் வெளியாக தயாராகி வருகிறது.

Continues below advertisement

அந்த வகையில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ்  புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற 'கூழாங்கல்' படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக பிரபலமான இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'கொட்டுக்காளி'. 

 


நடிகர் சூரி, அன்னா பென் உள்ளிட்டோரின் நடிப்பில் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் ஏற்கனவே பெர்லின் உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. பல விருதுகளை பெற்றுள்ளதால் படம் குறித்த மிகுதியான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.  

படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு 'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது. 

 

 

இப்படத்தில் நடிகர் சூரி, பாண்டி என்ற கதாபாத்திரத்திலும், மீனா என்ற கதாபாத்திரத்தில் அன்னா பென்னும்  நடித்துள்ளனர். அதன் பதிவுகள் சில தினங்களுக்கு முன்னர் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டன. இப்படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola