சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்தப்படத்தை விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து தயாரித்து இருந்தனர். இந்தப் படம் தற்போது சிங்கப்பூரில் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.