சமூகவலைதளங்களில் ரீல்ஸ் பாடல்களுக்கு ஆட்டம் போடுவது, ஏற்கனவே ஹிட் ஆன பீல் குட் காட்சிகளை அப்படியே படம் பிடித்து நடித்து பலரும் பிரபலமாகி வருகின்றனர். முன்பெல்லாம் வெள்ளித்திரையில் தோன்றும் நடிகர்களை பார்த்து ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்கள். ஆனால், சமூகவலைதளங்களில் கொச்சையாகவும் ஆபாசமாகவும் பேசி பிரபலமாகி வருவதையும் காண்கிறோம். ஆனால், ஒரே ஒரு வீடியோ மூலம் உலகம் முழுவதும் டிரெண்டிங் ஆனவர் நம்ம கூமாபட்டி தங்கபாண்டி. அவருடைய பெயருக்கு ஏற்றார் போல் அவரும் தங்கம் தான்.
கூமாபட்டிக்கு வாங்க
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் கூமாபட்டியை பற்றி வெளியிட்ட ஒரு வீடியோவை அனைவரும் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர் ஏங்க ஒரு வார்தையால் உள்ளூர் விளம்பரத்தில் இருந்து உலக மக்கள் பார்க்கும் சாட்டிலைட் சேனல் வரைக்கும் நடித்து ஃபேமஸ் ஆகிவிட்டார் தங்கபாண்டி. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அதில் அவரது பேச்சும், நடவடிக்கையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பட்டப்படிப்பு முடித்துவிட்டு போதிய ஊதியம் இல்லாமல் சொந்த ஊருக்கே வந்து மாடு மேய்ப்பதாக சில பேட்டிகளில் தங்கபாண்டி தெரிவித்திருக்கிறார். மேலும் சினிமாவில் நடிக்க வருவது குறித்து பேசியபோது நடிகர் மணிகண்டன் சொன்னதை நினைவுப்படுத்தினார்.
சூர்ய வம்சம் பாட பாடலுக்கு குத்தாட்டம்
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள சிங்கிள் பசங்க நிகழ்ச்சியின் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சாந்தினி பிரகாஷ் உடன் இணைந்து தங்கபாண்டி ஆடிய ஆட்டம் வைரலாகி வருகிறது. சூரியவம்சம் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்கள். நம்ம ஊரு பையன் ஜெயித்து வந்தால் மகிழ்ச்சி தான். தங்கபாண்டியால் கூமாபட்டிக்கும் மட்டுமல்ல விருதுநகருக்கே பெருமை என பலரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.