கொரோனா தொற்றுநோயை எதிர்த்து நாடு தொடர்ந்து போராடி வரும் நிலையில் , பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வை , அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் பல வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கி வருகின்றனர் . பல நிறுவனங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த தங்கள் முயற்சியைச் செய்து வருகின்றனர் , மேலும் பல பிரபலங்களும் தொடர்ந்து தங்களின் சமூக ஊடக பக்கங்களில் விழிப்புணர்வு வீடியோக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.


இப்போது, கோலிவுட்டைச் சேர்ந்த சில பிரபலங்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதற்காக ரோட்டரி கிளப்புடன் கைகோர்த்துள்ளனர். ஒரு நிமிடத்திற்கும் குறைவான வீடியோவில், சுஹாசினி மணிரத்னம், மாதவன், துல்கர் சல்மான், அதர்வா, விக்ரம் பிரபு, அரவிந்த் சுவாமி, ராதிகா மற்றும் நாசர் போன்ற நம்ம பிரபலங்கள், கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளைப் பற்றி பேசுகிறார்கள் மற்றும் தடுப்பூசி போட மக்களை வற்புறுத்துகிறார்கள் .





அந்த வீடியோவில், சுஹாசினி , “கோவிட் பரவுகிறது… வேகமாக. மிகவும் வேகமாக. நமக்கு சுய கட்டுப்பாடு தேவை. ஒரு சிறிய சீட்டு கூட… பேரழிவை உச்சரிக்க முடியும்,’’ என தன் பேச்சுை துவங்குகிறார். நடிகர் மாதவன்,  ‛‛முகமூடி அணிவது, சமூக விலகல், ஒருவரின் கைகளை கழுவுவது மிகவும் முக்கியம். அவசியம்,’’ என்று விழிப்புணர்வு செய்கிறார்.  துல்கர் சல்மானின் பேச்சில், ‛‛இது உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும்" என்று சுருங்க பேசுகிறார். அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து தடுப்பூசி, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நம்பிக்கை தரும் என்பதை பற்றி பேசியிருக்கிறார்கள். மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தடுப்பூசி எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இது அனைத்து பிரபலங்களின் குரலாக அமைந்துள்ளது.   இந்த விழிப்புணர்வு வீடியோவை உருவாக்க ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நடிகர்களுடன் ஒத்துழைத்துள்ளது.


பல நடிகர் நடிகைகளும் இது போன்ற விழிப்புணர்வு விடியோக்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர் .மக்கள் இடத்தில  எப்படியாவது இந்த நோயின் விளைவுகளை வெளிப்படுத்த பலரும் இது போன்ற வீடியோகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர் . தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை கோரத்தண்டவம் ஆடி வரும் நிலையில் இது போன்ற விழிப்புணர்வு வீடியோ பெரிய அளவில் பொதுமக்களிடம் சென்றடையும் என்ற நோக்கில் இந்த முயற்சியை ரோட்டரி கிளப் எடுத்துள்ளது. அதற்கு பிரபல சினிமா நட்சத்திரங்கள் உதவியிருப்பது பலரின் பாராட்டை பெற்றுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதைப் போன்று அதை பெற்றுக் கொள்வதும் மக்களின் கடமையாகும். குறைந்த பட்சம் அவர்களை பின்பற்றும் ரசிகர்களாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்.