கோலிவுட்டின் காதல் பறவைகளாக வலம் வரும் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இன்று (ஜூன்.09) மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெறும் நிலையில் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
வருகை தந்த பிரபலங்கள்
இவர்களது திருமணத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர்கள் அஜித், ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிகிறது. மேலும், ரஜினிகாந்த், போனி கபூர், சரத் குமார், ராதிகா, சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி, ரெபா மோனிகா ஜான், அனிருத் தந்தை ரவிச்சந்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக ஜூன். 9 இன்று விடியற்காலையில் விக்னேஷ் சிவன் பகிர்ந்த இன்ஸ்டா பதிவு வைரலானது.
’லவ் ஆஃப் மை லைஃப் நயன்’
அதில், ”இன்று ஜூன் 9. இந்த நாளில் கடவுள், பிரபஞ்சம், நாங்கள் கடந்து வந்த எங்களுக்கு நன்மை நினைக்கும் அழகான மனிதர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், அனைத்து நல்ல உள்ளங்கள், நல்ல தருணங்கள், நன்மை அளித்த தற்செயல் நிகழ்வுகள், ஆசிர்வாதங்கள், படப்பிடிப்பு நாள்கள், வாழ்க்கையை அழகாக்கிய ஒவ்வொரு பிரார்த்தனைகள் என அனைத்துக்கும் அனைவருக்கும் நன்றி.
நல்ல எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்! என் வாழ்நாளுக்கான காதலி நயன்தாராவுக்கு இதை நான் அர்ப்பணிக்கிறேன். என் தங்கமே! சில மணிநேரங்களில் நீ மணமேடையில் நடப்பதைக் காண நான் ஆர்வமாக உள்ளேன்.
வாழ்வின் புதிய அத்தியாயம்
எல்லா நன்மைகளுக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்கள் அன்பான குடும்பம் மற்றும் சிறந்த நண்பர்களின் முன் ஒரு புதிய அத்தியாயத்தை இன்று தொடங்குகிறோம்” என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இப்பதிவில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெபா மோனிக்கா ஜான் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
காதல் டூ கல்யாணம்
போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் சுமார் ஆறு ஆண்டு காலத்துக்குப் பிறகு இன்று திருமணம் நடக்கிறது.