Gucci Varalaxmi | தன் மகனை அறிமுகம் செய்த நடிகை வரலட்சுமி சரத்குமார்!

லயன் கிங் படத்தில் வருவதைப் போல தனது மகனை அறிமுகம் செய்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

Continues below advertisement

பிரபல நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் தான் வரலக்ஷ்மி என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லுரி படிப்பை முடித்த வரலக்ஷ்மி ஒரு மைக்ரோபயாலஜி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையை போல நடிப்பில் ஆர்வம் கொண்ட வரலக்ஷ்மி மும்பையில் உள்ள அனுபம் க்ஹெர் என்ற நடிப்பு பயிற்சி பள்ளியில் முறையாக நடிப்பு பயிற்சி பெற்றார். அதன் பிறகு நடிக்க ஆர்வத்துடன் இருந்த வரலட்சுமிக்கு தொடக்கத்திலேயே பல வாய்ப்புகள் வரத்தொடங்கியது. 

Continues below advertisement

ஷங்கரின் பாய்ஸ், காதல் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில் சில காரணங்களால் அவரால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு 2012ம் ஆண்டு பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் உருவான போடா போடி என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினர். போடா போடி விக்னேஷ் சிவனின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் வரலக்ஷ்மி தனது துணிவான பேச்சு மற்றும் தனித்துவமான நடிப்பிற்காக பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றார். நடிகை வரலக்ஷ்மி தற்போது கன்னடத்தில் லகாம் என்ற படத்திலும் 5 தமிழ் படங்களிலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு என்பது ஒருபுறம் இருக்க பல சமூக பணியிலும் வரலக்ஷ்மி பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றார். Save Sakthi என்ற நிறுவனம் மூலம் பல நல்ல காரியங்களை செய்து வருகின்றார். 

30வது ஆண்டில் சேரன் பாண்டியன்! சுவரை உடைத்து ஜாதியை தகர்த்த 90's கிட்ஸின் பேவரிட்!

இந்த கொரோனா காலகட்டத்தில் வெளிமாநில தொழிலார்கள், பெண்கள் என்று பலதரப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவி செய்து வருகின்றார். நடிகை, சமூக ஆர்வலர் என்பதை தாண்டி வரலக்ஷ்மி விலங்குகள் மீது மிகவும் அன்புகொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தான் Gucci என்ற தனது செல்ல நாய்க்குட்டியினை தனது மகனாக தற்போது அறிமுகம் செய்துள்ளார். லயன் கிங் படத்தில் வருவதுபோல தனது மகன் Gucci வரலட்சுமியை அறிமுகம் செய்துவைத்துள்ளார்.         

Continues below advertisement
Sponsored Links by Taboola